/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வழிபாட்டு தலம் கட்டுமான பணி நிறுத்தம்வழிபாட்டு தலம் கட்டுமான பணி நிறுத்தம்
வழிபாட்டு தலம் கட்டுமான பணி நிறுத்தம்
வழிபாட்டு தலம் கட்டுமான பணி நிறுத்தம்
வழிபாட்டு தலம் கட்டுமான பணி நிறுத்தம்
ADDED : ஆக 22, 2011 10:54 PM
அன்னூர் : அன்னூரில் வழிபாட்டு தலம் கட்டும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது.
அன்னூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜீவா நகரில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு மெயின் ரோட்டில் ஐந்து சென்ட் காலியிடம் உள்ளது. குமாரபாளையத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான இந்த காலியிடத்தில், வெளியூரைச் சேர்ந்த சிலர், 'காலி இடத்தில் டியூஷன் சென்டர் நடத்துகிறோம். அதற்கு தற்காலிக கட்டடத்தை நாங்களே கட்டிக்கொள்கிறோம். காலியிடத்துக்கு வாடகை தந்து விடுகிறோம்,' என்றனர். இடத்தின் உரிமையாளர் ஒப்புதல் அளித்தார். கட்டட பணி மேற்பார்வையாளரிடம் விசாரித்தபோது, அங்கு சர்ச் கட்டும் விஷயம் தெரிய வந்தது. அப்பகுதி மக்களும், பாரதிய ஜனதா கட்சியினரும் அங்கு திரண்டனர். கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களிடம், 'இங்கு சர்ச் கட்டக்கூடாது' என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஜீவா நகர் மக்கள் இடத்தின் உரிமையாளரிடம், 'இப்பகுதியில் சர்ச் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது' என்று கூறினர். இதையடுத்து இடத்தின் உரிமையாளர், சம்மந்தப்பட்டவர்களிடம் இடத்தை காலி செய்யும்படி தெரிவித்தவுடன் கட்டுமான பணி முழுமையாக நின்று போனது.