Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பவுத்த தத்துவ கருத்தரங்கம்

பவுத்த தத்துவ கருத்தரங்கம்

பவுத்த தத்துவ கருத்தரங்கம்

பவுத்த தத்துவ கருத்தரங்கம்

ADDED : ஆக 15, 2011 01:24 AM


Google News
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள அருமடல் பன்னாட்டு பவுத்த ஆதார மையத்தில், பவுத்த தத்துவ கருத்தரங்கம் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு பவுத்த ஆதார மைய நிர்வாக அறங்காவலரும், ஏ.ஏ.ஐ.எம்., தலைவருமான கந்தசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் பவுத்த மார்க்க உறுப்பினர் பந்தே அஸ்வகோஸ், ஏ.ஏ.ஐ.எம்., மாநில இணைச்செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில், மாநில அமைப்பாளர் குணசேகரன், அகில இந்திய தம்மசேனா கடலூர் மாவட்ட தலைவர் கலாமணி, பி.எஸ்.என்.எல்., நிர்வாகி ஜெயராஜ், வக்கீல் ராஜாமணி, கோவை வனத்துறை விஞ்ஞானி சேகர், விவேகானந்தா கல்லூரி பேராசிரியர் மோகன்ராஜ் ஆகியோர் பேசினர். முகாமில், விழுப்புரம், சென்னை, பொன்னமராவதி, அம்பை, தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர், வேலூர், கும்பகோணம், சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து புத்தமத துறவிகள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us