/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/போலீசை கண்டித்து சரக்கு ஆட்டோ முற்றுகைபோலீசை கண்டித்து சரக்கு ஆட்டோ முற்றுகை
போலீசை கண்டித்து சரக்கு ஆட்டோ முற்றுகை
போலீசை கண்டித்து சரக்கு ஆட்டோ முற்றுகை
போலீசை கண்டித்து சரக்கு ஆட்டோ முற்றுகை
ADDED : ஜூலை 25, 2011 09:39 PM
கோவை : அதிக அபராதம் விதிக்கும் போலீசாரை கண்டித்து, சரக்கு ஆட்டோக்களுடன், டிரைவர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், ரெட்கிராஸ் பகுதியில் இரண்டு மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை, ராம்நகர், காந்திபுரம், காட்டூர், படேல் ரோடு பகுதி சரக்கு ஆட்டோவில் நீளமான பிளாஸ்டிக் குழாய்கள், இரும்புக் கம்பிகள் கொண்டு செல்லப்படுகின்றன. கம்பிகளின் பின்பகுதியில் சிவப்புத் துணியை கட்டி எச்சரிக்கை செய்யாத மினி ஆட்டோ டிரைவர்களுக்கு, போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்தனர். இச்சூழலில் நேற்று, மினி ஆட்டோ டிரைவர்கள் சங்கத் தலைவர் மகேந்திரன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட சரக்கு ஆட்டோ ஓட்டுனர்கள், வாகனங்களுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் நோக்கி வந்தனர். முன் அறிவிப்பு ஏதுமின்றி வரிசையாக வந்த சரக்கு ஆட்டோக்களால் அதிர்ச்சி அடைந்த போலீசார், செஞ்சிலுவை சங்க கட்டடம் முன் ஆட்டோக்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, ஆட்டோவில் இருந்து இறங்கிய டிரைவர்கள், 'தரக்குறைவாக திட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்கு ஆட்டோக்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதம் 500 ரூபாய் என்பதை ரத்து செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி, அங்கேயே உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.உதவி கமிஷனர் ராமகிருஷ்ணன் தலைமையில் குவிந்த போலீசார், ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சு நடத்தினர். இதன்பின், நிர்வாகிகள் நான்கு பேர் போலீஸ் துணை கமிஷனரை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை 6.00 மணிக்குள் நல்ல முடிவு ஏற்படாவிட்டால், நாளை (இன்று) குடும்பத்துடன் காந்திபுரத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சரக்கு ஆட்டோ டிரைவர்கள் எச்சரிக்கை விடுத்து, முற்றுகைப் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.