/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வெவ்வேறு சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலிவெவ்வேறு சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி
வெவ்வேறு சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி
வெவ்வேறு சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி
வெவ்வேறு சாலை விபத்தில் 4 பேர் பரிதாப பலி
ADDED : செப் 24, 2011 01:20 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு வெவ்வேறு
இடங்களில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர்.
காவேரிப்பட்டணம் பன்னீர் செல்வம் தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (21). அதே
பகுதியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர்
நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரியில் இருந்து காவேரிப்பட்டணம் நோக்கி
பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக் திம்மாபுரம் அடுத்த தேசிய
நெடுஞ்சாலை பிரிவில் இருந்து காவேரிப்பட்டணம் சாலையில், 8.30 மணிக்கு வந்த
போது, கிருஷ்ணகிரி நோக்கி எதிரே வந்த, கமலம் என்ற தனியார் பஸ் பைக் மீது
மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராஜாராம் சம்பவ இடத்தில்
பலியானார். காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரித்து,
தர்மபுரியை சேர்ந்த பஸ் டிரைவர் காந்தி(26) என்பவரை கைது செய்தார். *
கிருஷ்ணகிரி அடுத்த சாலூரை சேர்ந்தவர் ரமேஷ் (28). தொகரப்பள்ளி கூட்டு
ரோடில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் ஐயப்பன் கோவிலுக்கு
சென்றுவிட்டு காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டப்பள்ளியில் உள்ள தன்
பெற்றோருக்கு பிரசாதம் கொடுக்க சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு
மிட்டப்பள்ளியில் இருந்து சந்தூர் நோக்கி ரமேஷ் பைக்கில் வந்துள்ளார்.
அப்போது வேலம்பட்டி அடுத்த ராம் நகர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி
ரமேஷ் சம்பவ இடத்தில் பலியானார். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் காசிநாதன்
விசாரிக்கின்றார்.
* தர்மபுரி மாவட்டம் அரூரை அடுத்த குரும்பட்டியை சேர்ந்தவர் கட்டிட
மேஸ்திரி குமார் (28). இவரும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி கணேசன்
(30) என்பவரும் ஊத்தங்கரை நோக்கி நேற்று முன்தினம் இரவு, 9.30 மணிக்கு
பைக்கில் வந்துள்ளனர். திப்பம்பட்டி அருகே வளைவில் திரும்பும்போது நிலை
தடுமாறி சாலையோர பனை மரத்தில் பைக் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட
குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். கணேசன் படுகாயமடைந்து
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்øகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் விசாரிக்கின்றார். * சூளகிரி அடுத்த
வரகானப்பள்ளியை சேர்ந்தவர் சரவணன் (23). இவர் அதே பகுதியில் உள்ள
கல்குவாரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை குவாரியில்
கற்கள் ஏற்றிய லாரியில் பழுது ஏற்பட்டதால் லாரிக்கு அடியில் படுத்தபடி
சரவணன் பழுது பார்த்துக்கொண்டிருந்தார். இதனையறியாமல் லாரி டிரைவர் லாரியை
ஸ்டார்டு செய்துள்ளார். அப்போது லாரி சக்கரம் ஏறி உடல் நசுங்கிய நிலையில்
சரவணனை மீட்ட சக தொழிலாளர்கள் அவரை சிகிச்சைக்காக மீட்டு ஓசூர் அரசு
மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வழியில் பரிதாபமாக இறந்தார். உத்தனப்பள்ளி
இன்ஸ்பெக்டர் தங்கவேல் விசாரிக்கின்றார்.