ADDED : ஜூலை 25, 2011 09:38 PM
பேரூர் : நரசீபுரம் ஊராட்சியின் கிராமசபைக்கூட்டம், அரசு பள்ளியில் நடந்தது.
ஊராட்சி தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். தேசிய ஊரகவேலை உறுதியளிப்புத் திட்டத்தில் நடந்து வரும் பணிகள், ஊராட்சி மன்றத்தில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான பணிகள் குறித்து தணிக்கைகள் செய்யப்பட்டன. அப்போது, மாவட்ட கலெக்டர் கருணாகரன் கிராமசபையில் கலந்து கொண்டு, ஐந்து வயது குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர்? ஊரில் குழந்தை தொழிலாளர் உள்ளனரா? பள்ளிக்கு குழந்தைகள் சரிவர அனுப்பப்படுகின்றனரா? என்பன குறித்து கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, ரேஷன் கடை திறக்கப்படும் நேரம், இலவச அரிசி வழங்கப்படும் அளவு, அரசு மருத்துவமனை செயல்படும்விதம் குறித்தும் கேட்டறிந்தார். அடிப்படை வசதிகோரி பொது மக்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பி.டி.ஓ., சந்திரசேகர், மக்கள்தொடர்பு அலுவலர் பாரதிதாசன், ஊராட்சி துணைதலைவர் ரத்னசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.