/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கூண்டில் சிறுத்தை சிக்காததால் வால்பாறை தொழிலாளர் பீதிகூண்டில் சிறுத்தை சிக்காததால் வால்பாறை தொழிலாளர் பீதி
கூண்டில் சிறுத்தை சிக்காததால் வால்பாறை தொழிலாளர் பீதி
கூண்டில் சிறுத்தை சிக்காததால் வால்பாறை தொழிலாளர் பீதி
கூண்டில் சிறுத்தை சிக்காததால் வால்பாறை தொழிலாளர் பீதி
ADDED : ஜூலை 31, 2011 11:34 PM
வால்பாறை : வால்பாறை அருகே சிறுமியை கொன்ற சிறுத்தை இரண்டு மாதங்களுக்கு
மேலாகியும் கூண்டில் சிக்காததால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை
அடுத்துள்ள முடீஸ் பகுதியில் சமீபகாலமாக சிறுத்தை அட்டகாசம் தொடர்கதையாக
உள்ளது. கடந்த மே மாதம் 18ம் தேதி தாய்முடி எஸ்டேட்க்கு தாயுடன் ரோட்டில்
நடந்து சென்ற ஜனனி(மூன்றரை வயது) என்ற சிறுமியை சிறுத்தை கொன்றது.
இதனையடுத்து சிறுமியை கொன்ற சிறுத்தையை பிடிக்க, கூண்டு வைத்து இரண்டு
மாதங்களுக்கு மேலாகியும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் டிமிக்கி
கொடுத்துவருகிறது. எஸ்டேட் பகுதியிலிருந்து ஆரம்ப பள்ளிக்கு நடந்து
செல்லும் மாணவர்களும், வெளியில் வேலைக்கு செல்லும் மக்களும் இந்த
வழித்தடத்தில் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வனத்துறை அதிகாரிகள்
கூறியதாவது: மழை அதிகமாக பெய்வதால் இதை பிடிப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. சிறுத்தை ரூட்டை மாற்றி வேறு பகுதியில் உலா வருவதால், இதன்
நடமாட்டத்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சிறுத்தையை பிடிப்போம்
என்றனர்.