/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை விலை ஏற்றம்பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை விலை ஏற்றம்
பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை விலை ஏற்றம்
பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை விலை ஏற்றம்
பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை விலை ஏற்றம்
ADDED : ஆக 31, 2011 01:37 AM
திருப்பூர் : முகூர்த்தங்கள் அதிகரித்துள்ளதால் காய்கறி, மளிகை பொருட்கள் நுகர்வு அதிகரித்துள்ளது.
தேவை அதிகரித்துள்ளது; வரத்து குறைந்துள்ளதால் கத்தரி, தக்காளி விலை ஏற்றம் பெற்றுள்ளன. மளிகை பொருட்களில் கடலை ரகங்கள் விலை ஏறத்துவங்கியுள்ளன.நேற்றைய மார்க்கெட் நிலவரம்:கடலை ரகங்கள் விலை ஏற்றம்: வரத்து குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால், கொண்டை கடலை, பொட்டு கடலை விலை கிலோவுக்கு நான்கு ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வெள்ளை ரகம் ரூ.70, கருப்பு ரகம் ரூ.40 என இருந்த கொண்டைக்கடலை விலை கிலோவுக்கு 4 ரூபாய் அதிகரித்து, நேற்று, வெள்ளை 74, கருப்பு ரகம் 44 என இருந்தது; 52 ரூபாயாக இருந்த பொட்டுக்கடலை 54 ரூபாயாக விலை ஏற்றம் பெற்றுள்ளது.தட்டைப்பயறு 42 ரூபாய்; துவரம் பருப்பு 52; பாசிப்பயறு 58; பாசிப்பருப்பு 62; எள்ளு 60; கொள்ளு 22; கொண்டைக்கடலை (கருப்பு) 44, வெள்ளை 74; சீரகம் 190; சுக்கு 280; சோம்பு 120; வரமிளகாய் 110; மல்லி 84; பொட்டுக்கடலை 54; மொச்சை 42; உளுந்து (உருட்டு) 68, கருப்பு 60 ரூபாய்; கடலை பருப்பு 44; வடை பருப்பு 28; பூண்டு 90; பச்சை பட்டாணி 28; கடுகு 42; வெந்தயம் 46; புளி (முதல் தரம்) 135, இரண்டாம் தரம் 88 ரூபாய்; மஞ்சள் 12 ரூபாய் என விற்கப்பட்டது.மளிகை வியாபாரிகள் கூறியதாவது:கடந்த ஒரு மாதமாக ஏற்றம் இறக்கம் இன்றி இருந்த மளிகை பொருட்கள் விலை, விசேஷ தினங்கள் வருகையால் ஏற்றம் பெறத்துவங்கியுள்ளன. சதுர்த்தி, விஜயதசமி தினங்கள் அடுத்தடுத்து வருவதால் கடலை ரகங்கள் தேவை அதிகரித்துள்ளது. இருப்பு மற்றும் வரத்து குறைந்து, தேவை அதிகரித்து வருவதால், கடலை ரகங்கள் விலை அதிகரித்துள்ளன, என்றனர்.கத்தரி விலை உயர்வு: திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் நேற்று, தக்காளி 8.50 ரூபாய்; கத்தரி 18; சின்ன வெங்காயம் 16; பெரிய வெங்காயம் 18; வெண்டை 10; புடலை 16; பீர்க்கன் 16; அவரை 16; சுரைக்காய் 6; அரசாணி, பூசணி 8 ரூபாய்; பச்சை மிளகாய் (குண்டு) 20, சம்பா 16; பீட்ரூட் 16; உருளைக்கிழங்கு 18; கோஸ் 12 ரூபாய்; பொரியல்தட்டை 16; மேரக்காய் 16; இஞ்சி 40; காலிபிளவர் 10; சேனைகிழங்கு 25; பாகல் 16; காரட் 25 ரூபாய்; பீன்ஸ் 20; எலுமிச்சை 50; கறிவேப்பிலை 15; கீரை 10; புதினா 10 ரூபாய் என விற்பனையாகின.உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ராமலிங்கம் கூறியதாவது:திருமணம், கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், காய்கறி நுகர்வு அதிகரித்துள்ளது. பெருமாநல்லூர், அவினாசி பகுதியில் இருந்து வரத்து குறைந்துள்ளதை அடுத்து, மார்க்கெட்டில் தக்காளி கிலோவுக்கு ரூ.1.50; கத்தரி கிலோவுக்கு 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது, என்றார்.எண்ணெய் விலை நார்மல்: எண்ணெய் ரகங்கள் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்றம் இறக்கம் இன்றி சீராக உள்ளது. தேங்காய் எண்ணெய் ரூ.103; நல்லெண்ணெய் 90; கடலை எண்ணெய் 104; பாமாயில் 65; சன்பிளவர் ஆயில் 86; ரீபைண்ட் ஆயில் 117; விளக்கு எண்ணெய் 140 ரூபாய் என விற்கப்பட்டது.