Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிதம்பரம் ராஜினாமா செய்வது அவர் எடுக்க வேண்டிய முடிவு : கருணாநிதி பேட்டி

சிதம்பரம் ராஜினாமா செய்வது அவர் எடுக்க வேண்டிய முடிவு : கருணாநிதி பேட்டி

சிதம்பரம் ராஜினாமா செய்வது அவர் எடுக்க வேண்டிய முடிவு : கருணாநிதி பேட்டி

சிதம்பரம் ராஜினாமா செய்வது அவர் எடுக்க வேண்டிய முடிவு : கருணாநிதி பேட்டி

ADDED : செப் 23, 2011 01:48 AM


Google News

சென்னை : ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சர் சிதம்பரம் பதவி விலகுவது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:



உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் கூட்டணியில் வேறு கட்சிகள் உள்ளதா?

சுத்தம் சுயம்பிரகாசமாக தனித்து தான் போட்டியிடுகிறோம். அதிகாரப்பூர்வமாக கூட்டணி அமைக்காவிட்டாலும், ஆங்காங்கே வெற்றி வாய்ப்புக்கு ஏற்றவாறு தொகுதி 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்து கொள்வோம்.



தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி தி.மு.க.,வுக்கு இருக்கும்?

வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று தான் தனித்து நிற்கிறோம். உள்ளாட்சி முன்னேற்றம், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்.



தி.மு.க.,விடமிருந்து பிரிந்ததில், காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதே?

மகிழ்ச்சி இரு பக்கமும் உண்டு.



ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், குற்றஞ்சாட்டப்படும் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை பிரதமர் வெளியேற்ற வேண்டுமென ஜெயலலிதா கூறியுள்ளாரே?

அவர் அரசியலுக்கு வந்த பிறகு, யார், யாரெல்லாம் ராஜினாமா செய்ய வேண்டுமென, அவர் சொன்ன பட்டியலை சொல்லி மாளாது. பிரணாப் முகர்ஜி, '2ஜி' தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு இது பற்றி தெரியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தான் முன்பு ராஜாவும் சொன்னார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.



தி.மு.க., தரப்பில் தவறு இல்லை என்கிறீர்களா?

இது கோர்ட்டில் உள்ள பிரச்னை. விரிவாக பேசுவது நல்லதல்ல.



உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடக்குமென நினைக்கிறீர்களா?

நடக்கும் என அய்யர் சொல்லியிருக்கிறார். அய்யர் என்றால் தேர்தல் கமிஷனரின் பெயர்.



ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்துவீர்களா? இவ்வழக்கை, அவரது துறையிலுள்ள சி.பி.ஐ., விசாரிக்கும் போது, அவர் பதவியில் நீடிப்பது சரியா?

அப்படி ஏதாவது இருந்தால், அவர் எடுக்க வேண்டிய முடிவு. முழு விவரம் எனக்கு தெரியாது என்பதால், விரிவாகச் சொல்ல முடியாது.



இரண்டு கட்ட தேர்தல், முறைகேடுக்கு வழிவகுக்குமென ராமதாஸ் சொல்லியுள்ளாரே?

பல முறை சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக நடந்துள்ளன. அவர் சொல்வதையும் மறுப்பதற்கில்லை.



திராவிட கட்சிகளை ராமதாஸ் இழிவாக பேசுகிறாரே?

அவர் பேசுவது புதிதல்ல. அதற்காக வருத்தப்படவில்லை.



ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 'ராஜா மட்டுமே செய்திருக்க முடியாது' என நீங்கள் சொல்லியிருந்தீர்களே?

நான் இதுவரை அப்படி சொல்லவில்லை.



பிரணாப் முகர்ஜி, பிரதமருக்கு எழுதியதாக சொல்லப்படும் தகவல், ஏற்கனவே ராஜா பல முறை கூறியதை, உறுதிப்படுத்துவது போல் இருக்கிறதே?

அவருக்கு (பிரதமருக்கு) தெரிவித்திருக்கிறேன் என சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு முறையும் இந்த '2ஜி' ஒப்பந்தங்கள் பேசப்பட்ட போதும், முடிவு செய்யப்பட்ட போதும் அவர்களோடு கலந்து பேசியிருக்கிறேன். அவர்களுக்கும் தெரியும் என்று தான் சொல்லியிருக்கிறார்.



மத்தியில் காங்கிரசுடன் கூட்டணி தொடர்கிறதா?

தொடர்கிறது. மத்தியில் காங்கிரசுடனான தி.மு.க., கூட்டணி நீடிக்கிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us