/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய கரூர் ஆர்.டி.ஓ.,தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய கரூர் ஆர்.டி.ஓ.,
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய கரூர் ஆர்.டி.ஓ.,
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய கரூர் ஆர்.டி.ஓ.,
தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அசத்திய கரூர் ஆர்.டி.ஓ.,
ADDED : செப் 17, 2011 01:47 AM
கரூர்: கரூரில் நடந்த இலவச பேன், மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் விழாவில் 'ஆடியோ டேப்' சொதப்பியதால், ஆர்.டி.ஓ., சாந்தி தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.
கரூர் பஞ்சாயத்து யூனியன் நஞ்சைகடம்பங்குறிச்சி பஞ்சாயத்து பண்டிதகாரன்புதூரில் நேற்று மாலை 5.30 மணிக்கு 398 பயனாளிகளுக்கு இலவச பேன், மிக்ஸி மற்றும் கிரைண்டர் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் ÷ஷாபனா தலைமையில் நடந்தது. விழா தொடக்கத்தின் போது தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆனால், ஒழுங்காக பாடல் ஒளிப்பரப்பாகவில்லை. மைக் செட் போடும் நபர் அதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி., தம்பிதுரை ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். உடனடியாக மைக் முன் ஓடிய கரூர் ஆர்.டி.ஓ., சாந்தி தமிழ்தாய் வாழ்த்து பாடினார். பயனாளிகளுக்கு இலவச பொருட்கள் வழங்கியநிலையில் விழா இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஆனால், தேசிய கீதமும் சரிவர ஒளிப்பரப்பாகவில்லை. நிலைமை உணர்ந்த ஆர்.டி.ஓ., சாந்தி மீண்டும் மைக் முன் ஓடி, தேசிய கீதத்தை இசை பிசகாமல் பாடினர். ஆர்.டி.ஓ., சாந்தி, தமிழ்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடிய போது, அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி., தம்பிதுரை, எம்.எல்.ஏ., காமராஜ், கலெக்டர் ÷ஷாப னா மற்றும் டி.ஆர்.ஓ., கிறிஸ்துராஜ் ஆகியோர் ரசித்துக் கேட்டனர்.