/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நாற்று நடும் போராட்டம் : கவுன்சிலர் அறிவிப்புநாற்று நடும் போராட்டம் : கவுன்சிலர் அறிவிப்பு
நாற்று நடும் போராட்டம் : கவுன்சிலர் அறிவிப்பு
நாற்று நடும் போராட்டம் : கவுன்சிலர் அறிவிப்பு
நாற்று நடும் போராட்டம் : கவுன்சிலர் அறிவிப்பு
ADDED : செப் 15, 2011 09:19 PM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் ரோடு மோசமாக இருப்பதை கண்டித்து, நாற்று நடும் போராட்டம் செய்வதாக நகராட்சி கவுன்சிலர் ராமமூர்த்தி அறிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை சிவன் கோயில்-புதிய பஸ் ஸ்டாண்ட் ரோடு படு மோசமாக உள்ளது. முக்கிய ரோடான இதில், அனைத்து ஊர் செல்லும் வாகனங்களும் வந்து செல்கின்றன. இந்த ரோடு குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதை சரி செய்ய கோரி, வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி தலைமையில், ரோட்டில் நாற்று நடும் போராட்டம் செய்ய உள்ளனர். கவுன்சிலர் ராமமூர்த்தி கூறியதாவது: ரோட்டை சரிசெய்ய, எம்.பி., நிதியிலிருந்து ரூ.4.50 லட்சத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி., ஒதுக்கினார். ஆனாலும் ரோடு சரி செய்யவில்லை. இதனால் வார்டு மக்களுடன் நாற்று நடும் போராட்டம் செய்ய உள்ளோன், என்றார்.


