Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மின் இணைப்பு, கழிவறை வசதி இன்றி வி.ஏ.ஓ.,க்கள் அவதி

மின் இணைப்பு, கழிவறை வசதி இன்றி வி.ஏ.ஓ.,க்கள் அவதி

மின் இணைப்பு, கழிவறை வசதி இன்றி வி.ஏ.ஓ.,க்கள் அவதி

மின் இணைப்பு, கழிவறை வசதி இன்றி வி.ஏ.ஓ.,க்கள் அவதி

ADDED : ஆக 25, 2011 01:16 AM


Google News
திருத்தணி : கிராம நிர்வாக அலுவலர்கள் கட்டடத்திற்கு மின் இணைப்பு மற்றும் கழிவறை வசதி இல்லாததால், வி.ஏ.ஓ.,க்கள் தினமும் அவதிப்படுகின்றனர்.திருத்தணி தாலுகாவில் திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஆகிய இரு ஒன்றியங்கள் உள்ளன.

இங்கு, 74 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடம் உள்ளது. தற்போது, 55 பேர் மட்டும் பணியாற்றி வருகின்றனர். 19 பணியிடங்கள் காலியாக உள்ளன.கிராம நிர்வாக அலுவலர்கள் தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளுக்கு சென்று கிராம பொதுமக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தர வேண்டும்.அவர்களுக்காக, ஒவ்வொரு ஊராட்சியிலும் வி.ஏ.ஓ., கட்டடத்தை அரசு கட்டிக் கொடுத்துள்ளது. இதில், வி.கே.என். கண்டிகை, மடம் கிராமம், தாடூர் ஆகிய மூன்று ஊராட்சிகளில் மட்டும் இதுவரை வி.ஏ.ஓ., கட்டடம் கட்டித் தரப்படவில்லை.தற்போது அ.தி.மு.க., அரசு, கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களிலேயே தங்கி வேலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்திற்கு சென்று பட்டா மற்றும் முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை பொதுமக்களிடமிருந்து வாங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து தற்போது வி.ஏ.ஓ.,க்கள் திங்கள்கிழமைகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமத்திற்கு சென்று மனுக்களை பெறுகின்றனர். 70க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக கட்டடத்திற்கு மின் இணைப்பு மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை.குறிப்பாக அலுவலக கட்டடத்தில் மின் இணைப்பு மற்றும் விளக்கு, மின்விசிறி வசதியில்லாததால் வி.ஏ.ஓ. ,க்கள் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.வி.ஏ.ஓ., கட்டடம் கட்டும் போது ஒப்பந்ததாரர்கள் மின் இணைப்பு கொடுப்பது இல்லை. மின் இணைப்பு வசதியில்லாததால் வி.ஏ.ஓ.,க்கள் சிலர் கிராமத்திற்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுவது இல்லை.இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய உயரதிகாரி ஒருவர் கூறும் போது, ''எங்கள் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் வி.ஏ.ஓ., கட்டடம் இல் லை என்றால் நாங்கள் கட்டித் தருவோம். இந்த கட்டடம் கட்டும்போது அறைக்குள் மின் ஒயரிங் இணைப்பு மட்டும் கொடுப்போம். அதற்கு தான் எங்களுக்கு அரசாங்கத்தில் அனுமதி அளிக்கப்பட்டது. வி.ஏ.ஓ., கட்டடம் கட்டி முடித்தவுடன் அதை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்து விடுவோம்.அதற்கு மின் இணைப்பு வாங்குவது அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தான் டெபாசிட் கட்டி மின்சார இணை ப்பு பெற்று கொள்ள வேண்டும். ஊராட்சித் தலைவர் விருப்பப்பட்டால் ஊராட்சி நிதியிலிருந்து மின் இணைப்பு வாங்கி கொடுக்கலாம். இனி வரும் காலங்களில் வி.ஏ.ஓ., கட்டடம் கட்டும் போது மின்சார இணைப்புக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்கிறோம்,'' என்றார்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us