Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/குத்துச்சண்டை போட்டி மீது அரசு கவனம் திரும்புமா

குத்துச்சண்டை போட்டி மீது அரசு கவனம் திரும்புமா

குத்துச்சண்டை போட்டி மீது அரசு கவனம் திரும்புமா

குத்துச்சண்டை போட்டி மீது அரசு கவனம் திரும்புமா

ADDED : செப் 22, 2011 12:28 AM


Google News

மதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குத்துச்சண்டை மைதானம், போட்டியாளர்கள் பங்கேற்க இயலாத நிலையில் உள்ளது.இம்மைதானத்தில் திறந்தவெளி அரங்கில் 20க்கு 20அடி நீள, அகலத்தில் குத்துச்சண்டை மேடை உள்ளது.

சுற்றிலும் சிமென்ட் பூசி, நடுவில் பெயருக்கு மணல் கொட்டப்பட்டுள்ளது. வீரர்கள் விளையாடும் போது, கீழே விழாமல் இருக்க, கயிறு கட்டப்படும். கயிற்றின் நான்கு மூலைகளிலும் தலையணைகள் அமைக்கப்பட்டிருக்கும். விளையாடும் தரையில் மரப்பலகை அமைத்து அதன் மேல் மூன்று அடுக்குகளாக மெத்தை விரிப்பு அமைக்கப்பட வேண்டும். இதன்பிறகுதான், வீரர்கள் இதில் விளையாட முடியும். ஆனால் இங்கே மணல் தவிர, வேறு வசதி இல்லை. மேடையில் விளையாடும் போது கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால், போட்டிகள் தரையில் நடத்தப்படுகின்றன. ரூ.பல லட்சம் செலவு செய்து, மேடை அமைத்தவர்கள், முறையாக செய்யாததால், மேடை பயனின்றி உள்ளது. தேவையான வசதிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us