உழவர் பாதுகாப்புஅட்டை வழங்கும் விழா
உழவர் பாதுகாப்புஅட்டை வழங்கும் விழா
உழவர் பாதுகாப்புஅட்டை வழங்கும் விழா
ADDED : செப் 21, 2011 11:12 PM
விருத்தாசலம்:இளமங்கலம் கிராமத்தில் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை
வழங்கும் விழா நடந்தது.விருத்தாசலம் அடுத்த இளமங்கலம் வி.ஏ.ஓ.,
அலுவலகத்தில் கிராமத்தில் தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை
வழங்கும் விழா நடந்தது.
ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு
அடையாள அட்டைகளை வழங்கினார்.சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் இருதயமேரி
முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் பவுனாம்பாள் வரவேற்றார். கிராமத்தைச்
சேர்ந்த 270 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு அடையாள அட்டை
வழங்கப்பட்டது.ஆர்.ஐ., பிரபாகரன், வி.ஏ.ஓ., சிவக்குமார் உட்பட பலர்
பங்கேற்றனர்.