/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அரசு புறம்போக்கு, கோயில் இடங்களை இனி போலி பத்திரம் மூலம் பதிவு செய்ய முடியாதுஅரசு புறம்போக்கு, கோயில் இடங்களை இனி போலி பத்திரம் மூலம் பதிவு செய்ய முடியாது
அரசு புறம்போக்கு, கோயில் இடங்களை இனி போலி பத்திரம் மூலம் பதிவு செய்ய முடியாது
அரசு புறம்போக்கு, கோயில் இடங்களை இனி போலி பத்திரம் மூலம் பதிவு செய்ய முடியாது
அரசு புறம்போக்கு, கோயில் இடங்களை இனி போலி பத்திரம் மூலம் பதிவு செய்ய முடியாது
ADDED : ஆக 13, 2011 12:45 AM
தூத்துக்குடி : அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் இடங்கள் உள்ளிட்டவற்றை
இனிமேல் ஏமாற்றி பத்திரம் பதிவு செய்ய முடியாது.
இதற்கு முடிவு கட்டும்
வகையில் தமிழக அரசு புதிய அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது போன்ற
நிலங்களுக்கு '0' (சீரோ) என்று மதிப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலி பத்திரம் நடமாட்டம், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு
இடங்கள், கோயில் இடங்கள், பஞ்சாயத்துக்கு சொந்தமான இட ங்கள் என்று மாநிலம்
முழுவதும் மதிப்பிட முடியாத அள விற்கு அரசு இடங்கள் போலி பத்திரம் மூலம்
பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.இதனை சரி செய்யும் வகையில்
ஜெ.,அரசு பத்திரப்பதிவுத்துறையில் புதிய அதிரடி நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது. ஏற்கனவே பத்திரப்பதிவுத்துறையில் அரசுக்கு கூடுதல் வருவாய்
ஈட்டும் வகையில் புதிய உத்தரவு கடந்த சில நாட்களுக்கு முன்பு
நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு
வந்துள்ளது.பத்திரப்பதிவுத்துறையில் 2007க்கு பிறகு திருத்திய வழிகாட்டி
மதிப்பீடு (கைடு லைன் வேல்யூ) செய்யப்படவில்லை. தற்போது தமிழக அரசு
புதியதாக கைடு லைன் வேல்யூவை நிர்ணயம் செய்து வெளியிடுவதற்கு வேண்டிய
பணிகளை பத்திரப்பதிவுத்து றை மூலம் மேற்கொண்டு வருகிறது.கடந்த சில
நாட்களுக்கு முன்பு மதுரையில் தென் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளின் ஆய்வு
கூட்டம் நடந்தது. இதில் புதியதாக கைடு லைன் வேல்யூ எடுப்பதற்கு குறித்து
எப்படி பணிகள் செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டது. இது
குறித்து படிவம் ஒன்று மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு துறையினருக்கு
வழங்கப்பட்டு விட்டன. இதன்படி சார்பதிவாளர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று
அந்த இடத்தில் உள்ள நிலங்களின் வேல்யூ மதிப்பை அறிவார்கள். அந்த பகுதியில்
நிலம் விற்பனை செய்யப்பட்டதில் அதிகமானோர் எந்த மதிப்பில் பத்திரம் பதிவு
செய்துள்ளனரோ அதனை ஆய்வு செய்து கைடு லைன் வேல்யூ நிர்ணயம் செய்ய உள்ளதாக
கூறப்படுகிறது.சிலர் தங்கள் சொந்த நலனுக்காக பாங்க் கடன் பெறுதல்
உள்ளிட்டவற்றிற்காக போலியாக நிலத்தின் மதிப்பை போட்டிருந்தால் அதன்படி அந்த
பகுதியில் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட மாட்டாது.அதே போல் சொந்த நலனுக்காக
குறைவாக அந்த பகுதியில் நிலமதிப்பு போட்டு பத்திரப்பதிவு
செய்யப்பட்டிருந்தாலும் அதனையும் இதில் ஏற்காத வகையில் சார்பதிவாளர்கள்
நேரடியாக அந்த பகுதிக்கு சென்று முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோரை பொது
இடத்தில் வைத்து சந்தித்து நிலத்தின் மதிப்பை கேட்டும், பத்திரம் பதிவு
செய்தவற்றை சரி பார்த்தும் கைடு லைன் வேல்யூ நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக
பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்திரப்பதிவுத்துறையில் புதியதாக
அரசு கொண்டு வந்துள்ள அதிரடி நடைமுறையால் இனிமேல் அரசு இடங்கள்,
புறம்போக்கு இடங்கள், கோயில் இடங்கள், வக்போர்டு இடங்கள், குளம், கண்மாய்,
பொது இடம் போன்ற அரசு இடங்களை தங்கள் இடம் என்று போலியான பத்திரம் பதிவு
செய்ய முடியாது. இனிமேல் இது போன்ற அரசு இடங்களுக்கு புதியதாக எடுக்க உள்ள
பட்டியலில் நிலத்தின் மதிப்பு '0' (சீரோ) என்று போடப்பட்டு விடும்.
இனிமேல் அரசு இடத்தை போலி பத்திரம் போட வரும் போது ஆவணங்களை சரிபார்க்கும்
போது அந்த இடத்தின் மதிப்பு சீரோ என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் பதிவு
செய்யும் அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டு விடும். இதனால் அவர் அந்த
பத்திரத்தை பதிவு செய்ய மறுத்துவிடுவார். இதன் மூலம் முறையற்ற
பத்திரப்பதிவு முழுமையாக நின்று போய்விடும் என்றும் பத்திரப்பதிவு
வட்டாரங்கள் தெரிவித்தன. அரசின் புதிய கைடு லைன் வேல்யூ போன்றவை மக்கள்
பார்வைக்கும் வைக்கப்பட்டு அதன் பிறகு இது சம்பந்தமாக புதிய வழிகாட்டி
மதிப்பீடு அரசாணை பதிவுத்துறை மூலம் வெளியாகும் என்றும் அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.


