/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஆரோக்கியமான குழந்தைகள்நாட்டின் சிறந்த செல்வங்கள்ஆரோக்கியமான குழந்தைகள்நாட்டின் சிறந்த செல்வங்கள்
ஆரோக்கியமான குழந்தைகள்நாட்டின் சிறந்த செல்வங்கள்
ஆரோக்கியமான குழந்தைகள்நாட்டின் சிறந்த செல்வங்கள்
ஆரோக்கியமான குழந்தைகள்நாட்டின் சிறந்த செல்வங்கள்
ADDED : செப் 15, 2011 03:52 AM
விழுப்புரம்:ஆரோக்கியமான குழந்தைகள் நாட்டின் சிறந்த செல்வங்கள் என்று
கலெக்டர் மணிமேகலை அறிவுரை வழங்கினார்.தேசிய ஊட்டச் சத்து வார நிறைவு விழா
நேற்று கண்டமங்கலம் ஜீவா திருமண மண்டபத்தில் நடந்தது. ஒருங்கிணைந்த
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பிரபாவதி வரவேற்றார். கலெக்டர் மணிமேகலை
தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி,
அடுத்த தலைமுறையினரை ஊட்டச் சத்து குறைபாட்டிலிருந்து மீட்பதே நமது
லட்சியம் என்ற தலைப்பில் பேசியதாவது:விலை உயர்ந்த பொருட் கள் மட்டுமே
ஊட்டச் சத்துகள் நிறைந்தது என்று சாப்பிடும் பழக்கத்தை மாற்ற வேண்டும்.
நம்முடைய தோட்டங்களில் விளையும் காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு
வகைகளை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். அளவுக்கு அதிகமாக
சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு கேட்டை ஏற்படுத்தும். அங்கன்வாடி
மையங்களில் குழந்தைகளை அடிக் கடி எடைபோட்டு, அவர்களின் உடல் வளர்ச்சியை
கண்காணிக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகள் நாட்டின் சிறந்த செல்வங்கள்
என்பதை உணர்ந்து பெற்றோர்களும், குழந்தை பாதுகாப்பு அலுவலர்களும் செயல்பட
வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் மணிமேகலை பேசினார்.புதுச்சேரி உணவு மற்றும் ஊட்டச்சத்து
வாரிய செயல்முறை விளக்க அலுவலர் திருநாவுக்கரசு, மாவட்ட சமூக நல பாதுகாப்பு
அலுவலர் ஷீலா, கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் முல்லைசாரதி,
பி.டி.ஓ., செங்குட்டுவன், வள்ளலார் அரசு மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
தங்கராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்
ராஜம்மாள் நன்றி கூறினார்.


