/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/60 வார்டு பிரித்ததில் கடும் குளறுபடி: கமிஷனரிடம் தே.மு.தி.க., கவுன்சிலர் புகார்60 வார்டு பிரித்ததில் கடும் குளறுபடி: கமிஷனரிடம் தே.மு.தி.க., கவுன்சிலர் புகார்
60 வார்டு பிரித்ததில் கடும் குளறுபடி: கமிஷனரிடம் தே.மு.தி.க., கவுன்சிலர் புகார்
60 வார்டு பிரித்ததில் கடும் குளறுபடி: கமிஷனரிடம் தே.மு.தி.க., கவுன்சிலர் புகார்
60 வார்டு பிரித்ததில் கடும் குளறுபடி: கமிஷனரிடம் தே.மு.தி.க., கவுன்சிலர் புகார்
ADDED : ஜூலை 11, 2011 02:49 AM
ஈரோடு:'ஈரோடு மாநகராட்சியில் உத்தேச வார்டுகள் பிரித்ததில் குளறுபடி நடந்துள்ளது' என தே.மு.தி.க., கவுன்சிலர் கோவேந்தன், கமிஷனர் பாலசந்தரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சியின் உத்தேச வார்டுகளின் எல்லை விவரம் வெளியாகியுள்ளது. அதில், பல குளறுபடிகள் நடந்துள்ளன. பல வார்டுகள் அரசின் வழிகாட்டுதல் படி பிரிக்கவில்லை. ஒரு வார்டு நீள வாக்கிலும், ஒரு வார்டு அகல வாக்கிலும், ஒரு வார்டு 'எல்' வடிவிலும், ஒரு வார்டு 'ப' வடிவிலும் பிரிக்கப்பட்டுள்ளன. பிரதான சாலைகள் கடந்து செல்வது, ஓடை போன்ற நீர்நிலைகளை கடந்து செல்வது போல, ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாத வகையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் வார்டு வாரியாக மக்கள் நல பணிகள் செய்யும்போது, பல இடையூறுகள் ஏற்படும். ஒரு உள்ளாட்சி அமைப்பின் தெருக்கள் அருகிலேயே மற்றொரு உள்ளாட்சி அமைப்பின் தெருக்கள் வருகின்றன. அருகில் உள்ள இரண்டு தெருக்கள் வெவ்வேறு வார்டுகளுக்கு மிக அதிக தொலைவுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பிற்காலத்தில் கவுன்சிலராக வருபவரின் செயல்பாட்டுக்கு மிகவும் இடையூறாக இருக்கும். உதாரணமாக, பி.பி.அக்ரஹாரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏழாவது வார்டின் ஒரு பகுதி காவிரி கரையோரம் உள்ளது. மற்றொரு பகுதி பவானி மெயின் ரோட்டில் உள்ளது. காவிரி கரை பகுதியில் இருந்து பவானி மெயின் ரோட்டுக்கு வந்து செல்ல வேண்டுமென்றால், ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதுபோல உள்ள குளறுபடிகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.