/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 02, 2011 12:24 AM
கடலூர் : கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழாவையொட்டி
நர்சிங் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி
வைத்தார்.பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க வேண்டும் என்பதை
வலியுறுத்தியும், தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும்
நன்மைகள் குறித்துக் கூறும் வகையில் ஆண்டு தோறும் ஆகஸ்டு முதல் வாரம்
தாய்ப்பால் வார விழாவாகக் கொண்டாடப்படுகிறது.கடலூர் அரசு பொது மருத்துவமனை
சார்பில் நேற்று தாய்ப்பால் வார விழா துவங்கியது.
அதனையொட்டி நேற்று காலை
கடலூர் அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவிகள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை கலெக்டர் அமுதவல்லி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மருத்துவமனையின் இணை இயக்குனர் டாக்டர் மனோகர், கண்காணிப்பாளர்
ராமச்சந்திரன், நிலைய மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜன், குழந்தை நல தலைமை
மருத்துவர் டாக்டர் கமலக்கண்ணன், மகப்பேறு மருத்துவர் கலா மற்றும்
மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் மருத்துவமனையில் துவங்கி
முக்கிய சாலைகள் வழியாக மீண்டும் மருத்துவமனையை அடைந்தது.