/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெல்லிக்குப்பம் பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வுநெல்லிக்குப்பம் பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு
நெல்லிக்குப்பம் பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு
நெல்லிக்குப்பம் பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு
நெல்லிக்குப்பம் பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு
ADDED : செப் 26, 2011 10:34 PM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. நேற்று காலை சி.இ.ஓ., அமுதவல்லி திடீரென பள்ளிக்கு வந்து மாணவர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். பிறகு பள்ளி அலுவலகத்திற்குச் சென்று ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தார். ஆசிரியர்கள் எஸ்.எம்.எஸ். மூலம் வருகையை பதிவு செய்தவர்கள் பள்ளியில் உள்ளனரா என விசாரித்தார்.பள்ளிக்கு வராமல் தவறாக எஸ்.எம்.எஸ். அனுப்பியது கண்டுபிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
பல வகுப்புகளில் புதியதாக சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சமச்சீர் பாடப்புத்தகம் கிடைக்கவில்லையென மாணவர்கள் புகார் கூறினர். ஓரிரு நாளில் அனைவருக்கும் புத்தகம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.