ஈரோடு: ஈரோடு அருகே பஸ் மோதி பெண் பலியானார்.
கவுந்தப்பாடியை சேர்ந்தவர் இளம்பெண் பரணி (25).நேற்று மாலை 6 மணியளவில், பி.பி.அக்ரஹாரம் அப்துல்லா என்பவருடன், பைக்கில் பரணி சென்றார். சூளை அருகே தனியார் டவுன் பஸ் மோதி, பரணி பலியானார். காயமடைந்த அப்துல்லா ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.