/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பாதாள சாக்கடை திட்டத்திற்கு தீர்வு : நகராட்சி தலைவர் வேட்பாளர் வளர்மதிபாதாள சாக்கடை திட்டத்திற்கு தீர்வு : நகராட்சி தலைவர் வேட்பாளர் வளர்மதி
பாதாள சாக்கடை திட்டத்திற்கு தீர்வு : நகராட்சி தலைவர் வேட்பாளர் வளர்மதி
பாதாள சாக்கடை திட்டத்திற்கு தீர்வு : நகராட்சி தலைவர் வேட்பாளர் வளர்மதி
பாதாள சாக்கடை திட்டத்திற்கு தீர்வு : நகராட்சி தலைவர் வேட்பாளர் வளர்மதி
ADDED : அக் 13, 2011 12:35 AM
விருதுநகர் : 'பாதாள சாக்கடை திட்டத்தால் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து, செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன்,'' என, பா.ஜ., ஆதரவு பெற்ற, விருதுநகர் நகராட்சி தலைவர் நகர்நல அமைப்பு பொது வேட்பாளர் வளர்மதி கூறினார்.
விருதுநகர் டவுன் பஜார் பகுதியில் ஓட்டு சேகரித்த அவர் கூறியதாவது: மக்களின் குடிநீர் தேவைக்காக 47 லட்சம் லிட்டர் தண்ணீர், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வருகிறது. இது தேவைக்கு போதுமானதாக இல்லாததால், மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். இதை தீர்க்க, 10 லட்சம் , 5 லட்சம் லிட்டர் கொண்ட தலா இரண்டு மேல்நிலை தொட்டிகள் கட்டி, மூன்று தினங்களக்கு ஒருமுறை குடி நீர் வர செய்துபிரச்னையை தீர்ப்பேன். கழிப்பறைகளை நவீனபடுத்தி, தினம் காலை, மாலை இருவேளையும் சுத்தபடுத்தி சுகாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். பாதாள சாக்கடை திட்டத்தால், நகரிலுள்ள ரோடுகள் தோண்டப்பட்டு, சீர்படுத்தப்படாமல் திட்டமும் வெற்றியடையாமல் இருப்பதை ஆய்வு செய்வேன். இதில் உள்ள குறைகளை தீர்த்து, ஓராண்டுக்குள் அனைத்து பகுதிகளுக்கும் புதிய இணைப்பு கொடுப்பேன். மகளிர் குழுக்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கி, தகுதியுடைய அனைவருக்கும் அரசு உதவிகள் கிடைத்திட செய்வேன். வி.என்.பி.ஆர். பூங்கா பராமரிப்பின்றி ஆடு மாடுகள் அடைந்து கிடப்பதை மாற்றி, அனைத்து வசதிகளுடன் அனைவரும் பொழுதுபோக்க வசதி செய்து கொடுப்பேன், என்றார்.


