Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கழிவு நீரால் சுகாதாரம் பாதிப்புதொழிற்சாலையை மூட உத்தரவு

கழிவு நீரால் சுகாதாரம் பாதிப்புதொழிற்சாலையை மூட உத்தரவு

கழிவு நீரால் சுகாதாரம் பாதிப்புதொழிற்சாலையை மூட உத்தரவு

கழிவு நீரால் சுகாதாரம் பாதிப்புதொழிற்சாலையை மூட உத்தரவு

ADDED : ஜூலை 11, 2011 03:35 AM


Google News
ஓசூர்: மத்திகிரி அருகே குடியிருப்பு பகுதியில், பொது சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கழிவு நீரை வெளியேற்றிய பட்டு நூல் தயாரிப்பு கம்பெனியை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் செய்ததையடுத்து கம்பெனியை மூன்று நாட்களுக்குள் மூடுவதற்கு, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் உத்தரவிட்டது.

ஓசூர் அடுத்த மத்திகிரி டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட குருப்பட்டியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் குடியிருப்பு பகுதியையொட்டி பாபுலால் என்பவர் பட்டு நூல் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்க்கினறனர். இங்கு பட்டு பூச்சு மூட்டையில் இருந்து பட்டு நூல் தயாரித்து வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பட்டு நூல் தயாரிப்பு கம்பெனியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பாதுகாப்பற்ற முறையில் குடியிருப்பு பகுதியில் திறந்து விடப்படுகிறது.

இதனால், வீடுகள் முன் கழிவு நீர் தேங்கி கடும் தூர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள், பெரியவர்களுக்கு பல்வேறு நோய்கள் பரவியது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் மத்திகிரி டவுன் பஞ்சாயத்து, போலீஸாரிடம் புகார் தெரிவித்தனர். கம்பெனியை அப்புறப்படுத்த தமாமதமானதால், ஆத்திரமடைந்த குருப்பட்டி பொதுமக்கள், அப்பகுதி பஸ்ஸ்டாண்ட்டில் ஓசூர்- தேன்கனிக்கோட்டை செல்லும் சாலையில் 'திடீர்' சாலைமறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த மத்திகிரி இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி, டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணப்பன், எஸ்.ஐ., ரஜினி மற்றும் போலீஸார், டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்(பொ) மஞ்சுநாதன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்(பொ) மஞ்சுநாத், பாதுகாப்பற்ற முறையில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீரை வெளியேற்றிய, பட்டு நூல் தயாரிப்பு கம்பெனியை மூன்று நாட்களுக்குள் மூடுவதற்கு உத்தரவிட்டார்.

இதனிடையே, பொதுமக்களை சாலை மறியல் செய்ய தூண்டியதாக மத்தகிரி பஞ்சாயத்து கவுன்சிலர்கள் ரமேஷ், சீனிவாசராவ் ஆகியோர் மீது மத்தகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், பொதுமக்களை மறியலுக்கு தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனவும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us