/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலிஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலி
ஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலி
ஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலி
ஆம்னி வேன் மீது ரயில் மோதல் : இருவர் பலி
ADDED : செப் 21, 2011 10:55 PM
கொடைரோடு : திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற ஆம்னி வேன் மீது ரயில் மோதி, இருவர் பலியாகினர்.
திண்டுக்கல் -மதுரை வழித்தடத்தில், கொடைரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு முன், தர்மாபுரி ஆளில்லா கிராசிங் உள்ளது. நேற்று மதியம் 3 மணிக்கு, திருச்சி- மதுரை ரயில் பாதையை ஆய்வு செய்யும் சிறப்பு ரயில் வந்தது. அப்போது, நெடுஞ்சாலையில் இருந்து ஆம்னி வேன், கிராசிங்கை கடக்க முயன்றது. ரயில் இன்ஜின் முன்புற கம்பியில் வேன் கதவு சிக்கி, அரை கி.மீ., இழுத்து செல்லப்பட்டது. வேனை ஓட்டி சென்ற கணேசன், 29, உடன் சென்ற சசிக்குமார், 39, பலியாகினர். இருவரும் மதுரை கே.புதூரை சேர்ந்தவர்கள். எதற்காக வந்தனர்? என்ற விபரம் தெரியவில்லை. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.