ADDED : செப் 21, 2011 06:00 PM

கோவை: அசோக் லேலண்ட் அறிமுகப்படுத்திய, 'தோஸ்த்' வாகன விற்பனைக்கு, அம்மன் ஆட்டோ ஷோரூம் சிங்காநல்லூரில், துவக்கப்பட்டது.
புதிய ÷ஷாரூமை அசோக் லேலண்ட் செயல் இயக்குனர் நிதின்ஷேத் துவக்கி வைத்தார். அசோக் லேலண்ட் பொதுமேலாளர் (விற்பனை) ஆதிநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அசோக் லேலண்ட் லிமிடெட், நிஸான் மோட்டார் கம்பெனி ஒருங்கிணைந்து, 1.25 டன் எடை ஏற்றிச் செல்லும் தோஸ்த் என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளன. புதிய ÷ஷாரூமில் தோஸ்த் வண்டி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
குறைவான கியர் மாற்றங்களுக்கு ப்ளாட் டார்க் கர்வ், 4.8எம் ஆரம் கொண்ட குறைந்த வளையும் திறன், பூஸ்ட்டர் மற்றும் எல்.எஸ்.பி.வி., உடன் சிறந்த பிரேக்ஸ், 14 அங்குல பெரிய டயர்கள், லோடிங் செய்ய குறைந்த அளவு உயரம் மற்றும் பெரிய லோடிங் பகுதி, டியூயல் டோன் இன்டீரியர்ஸ் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. விழாவில், அம்மன் ஆட்டோ மேலாண்மை இயக்குனர் சுரேஷ், இயக்குனர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.