/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெருந்துறை தொகுதி பஞ்.,கள் அ.தி.மு.க.,வுக்கு கைமாறுமா?பெருந்துறை தொகுதி பஞ்.,கள் அ.தி.மு.க.,வுக்கு கைமாறுமா?
பெருந்துறை தொகுதி பஞ்.,கள் அ.தி.மு.க.,வுக்கு கைமாறுமா?
பெருந்துறை தொகுதி பஞ்.,கள் அ.தி.மு.க.,வுக்கு கைமாறுமா?
பெருந்துறை தொகுதி பஞ்.,கள் அ.தி.மு.க.,வுக்கு கைமாறுமா?
ADDED : செப் 21, 2011 01:23 AM
பெருந்துறை : பெருந்துறை தொகுதியில் ஒட்டுமொத்தமாக தி.மு.க., வசமுள்ள
இரண்டு பஞ்சாயத்து யூனியன்கள் மற்றும் எட்டு டவுன் பஞ்சாயத்துகளை,
அ.தி.மு.க., கைப்பற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெருந்துறை சட்டசபை
தொகுதியில் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி மட்டுமே எம்.எல்.ஏ.,வாக
வெற்றி பெற்றுள்ளது. ஆனால், உள்ளாட்சி தேர்தலைப் பொறுத்தவரை பெருந்துறை
டவுன் பஞ்சாயத்தை அ.தி.மு.க., கைப்பற்றியதில்லை. பெருந்துறை சட்டசபை
தொகுதியில், பெருந்துறை யூனியன், பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம்,
நல்லாம்பட்டி, பெத்தாம்பாளையம், காஞ்சிக்கோவில், பள்ளப்பாளையம் ஆகிய ஆறு
டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. ஊத்துக்குளி யூனியனில், ஊத்துக்குளி,
குன்னத்தூர் ஆகிய இரண்டு டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. பெருந்துறை யூனியனில்
29 கிராம பஞ்சாயத்துகள், ஊத்துக்குளி யூனியனில் 39 கிராம பஞ்சாயத்துகள்
உள்ளன. கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலிலில் பெருந்துறை தொகுதியிலுள்ள ஏழு
டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியையும் தி.மு.க.,வே கைப்பற்றியது. ஊத்துக்குளி
டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவியை கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்
கைப்பற்றியது. ஊத்துக்குளி யூனியன் தலைவர் பதவியை தி.மு.க.,வும்,
பெருந்துறை யூனியன் தலைவர் பதவியை கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட்டும்
கைப்பற்றின. இவ்விருயூனியன்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளையும்
ஒட்டுமொத்தமாக தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே கைப்பற்றின.
இதுபோல், தற்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க., அனைத்து பதவிகளையும்
கைப்பற்றுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.