Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மோட்டார் பைக் பெட்டியை உடைத்து ரூ. 2 லட்சம் திருட்டு

மோட்டார் பைக் பெட்டியை உடைத்து ரூ. 2 லட்சம் திருட்டு

மோட்டார் பைக் பெட்டியை உடைத்து ரூ. 2 லட்சம் திருட்டு

மோட்டார் பைக் பெட்டியை உடைத்து ரூ. 2 லட்சம் திருட்டு

ADDED : செப் 20, 2011 08:57 PM


Google News

திட்டக்குடி : மோட்டார் பைக் பெட்டியை உடைத்து 2 லட்சம் ரூபாயை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநத்தம் அடுத்த வி.சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 40. இவர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். சொந்த ஊருக்கு வந்த இவர் நேற்று காலை ராமநத்தம் இந்தியன் வங்கியில் தனது கணக்கிலிருந்து 2 லட்சம் ரூபாய் எடுத்தார். பணத்தை பைக் பெட்டியில் வைத்து பூட்டி விட்டு காய்கறி வாங்க வாரச் சந்தைக்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்த போது பைக் பெட்டி திறந்து கிடந்ததும், அதிலிருந்து 2 லட்சம் ரூபாய் காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us