Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மலைவாழ் மாணவர்களுக்கு நேரில் சென்று சான்று வழங்கிய ஆர்.டி.ஓ.,

மலைவாழ் மாணவர்களுக்கு நேரில் சென்று சான்று வழங்கிய ஆர்.டி.ஓ.,

மலைவாழ் மாணவர்களுக்கு நேரில் சென்று சான்று வழங்கிய ஆர்.டி.ஓ.,

மலைவாழ் மாணவர்களுக்கு நேரில் சென்று சான்று வழங்கிய ஆர்.டி.ஓ.,

ADDED : செப் 20, 2011 01:03 AM


Google News

ஆத்தூர்: ஆத்தூர் அருகே மலை கிராமங்களை சேர்ந்த, 202 மாணவ, மாணவியருக்கு, ஆத்தூர் ஆர்.டி.ஓ., நேரில் சென்று ஜாதிச்சான்று வழங்கினார்.

ஆத்தூர் தாலுகாவில் உள்ள கல்வராயன்மலை வருவாய் பிர்க்காவில், பெரிய கல்வராயன்மலை, சின்னக்கல்வராயன்மலை, மேல்நாடு, கீழ்நாடு, தெற்கு நாடு, வடக்கு நாடு, தும்பல், பாப்பநாயக்கன்பட்டி, கருமந்துறை போன்ற, 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. அங்கு வசித்து வரும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு, வருவாய்த்துறையினரிடம் 'மலையாளி' ஜாதிச்சான்று கேட்டு மனு அளித்து வருகின்றனர். ஆனால், அம்மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் விசாரணை செய்து, விரைந்து ஜாதி சான்றுகள் வழங்காமல் அலைக்கழிப்பு செய்து வந்தனர். இதனிடையே, மலைவாழ் மக்கள் சங்கத்தினர், கடந்த 5ம் தேதி, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், மாணவர்களுக்கு ஜாதிச்சான்று வழங்க வலியுறுத்தி, முற்றுகை போராட்டம் நடத்தினர். அதையடுத்து, ஆத்தூர் ஆர்.டி.ஓ., செல்வராஜ், வடக்குநாடு, மேல்நாடு, கீழ்நாடு, தெற்கு நாடு, கருமந்துறை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல் ஆகிய ஆறு மலை கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவியரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, 202 மாணவ, மாணவியருக்கு, கருமந்துறை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., செல்வராஜ், ஜாதிச்சான்று வழங்கினார். இதில், ஆத்தூர் தாசில்தார் லியாகத்அலிகான், மண்டல துணை தாசில்தார் மனோகர், ஆர்.ஐ., பெரியசாமி, வி.ஏ.ஓ.,க்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us