/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பயிறு வகை பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்பயிறு வகை பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
பயிறு வகை பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
பயிறு வகை பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
பயிறு வகை பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்
ADDED : செப் 20, 2011 12:08 AM
புதியம்புத்தூர் : தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயறு வகை பயிர்களுக்கு மானிய விலையில் இடுபொருள்கள் வேளாண் துறையால் வழங்கப்படுகிறது.
ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் மானாவரி விவசாயத்தில் உளுந்து மற்றும் பாசிப்பயறு வகைகள் ஏராளமாக பயிரிடப்படுகின்றது. இப்பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஆதார விதைகள் மற்றும் சான்று விதைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவிற்கு 10 வீதம் நிதியாக 3 லட்சமும், விவசாயிகளுக்கு சான்று விதைகளை மானியத்தில் விநியோகித்திட கிலோவிற்கு 12 வீதம், 4 1/2 லட்சமும், பயறு வகை பயிர்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் மற்றும் நுண் உரம் இடுவதற்கு நிதியாக 1.8 லட்சமும், உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா இடுவதற்கு மானியமாக 0.36 லட்சமும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பிற்காக 1.8 லட்சமும், பயிர் பாதுகாப்பு மருந்துகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கிட 1.2 லட்சமும் ரோட்டோவேட்டர் கருவிகளுக்கு ஒரு கருவிகளுக்கு 0.03 வீதம் 6 கருவிகளுக்கு 1.8 லட்சமும், தெளிப்பான்கள் மானிய விலையில் வழங்கிட 0.3 லட்சமும், பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்கிட 0.04 லட்சமும், களைக்கொல்லி மானியத்தில் விநியோகித்திட 0.3 லட்சமும், பைப் லைன் விநியோகத்திற்கு 1.2 லட்சமும், தெளிப்பு நீர் கருவிகளுக்கு 0.22 லட்சமும், வயல்வெளி பள்ளி அமைத்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்திட 0.51 லட்சமும் மானியம் உள்ளது.
மேற்சொன்ன சலுகைகளை பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் நயினார், பிரான்சிஸ், முருகவேணி, சிக்கந்தர் பாட்சா, சாந்தலெட்சுமி ஆகியோரை அணுகி பயனடைந்து கொள்ளுமாறு ஓட்டப்பிடாரம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.


