ADDED : செப் 18, 2011 09:34 PM
திட்டக்குடி:தொழுதூர் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில்
பொறியாளர்கள் தினவிழா நடந்தது.கல்லூரி தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை
தாங்கினார். கல்லூரி முதல்வர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு
அலுவலர் சரவணன் வரவேற்றார். பொறியாளர் பெரியண்ணா, சமூகத்தில்
பொறியாளர்களின் முக்கியத்துவம் குறித்தும், கடமைகள் குறித்தும்
விளக்கினார். பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
வழங்கப்பட்டது.
விழாவில் துறைத் தலைவர்கள் பாலாஜி, மணிகண்டன், ரேவதி, கஜலட்சுமி, சுரேஷ்,
தனமதி உட்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி துணை முதல்வர் செல்வராஜ் நன்றி
கூறினார்.