Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இறந்து கிடந்தபெண் யானை

இறந்து கிடந்தபெண் யானை

இறந்து கிடந்தபெண் யானை

இறந்து கிடந்தபெண் யானை

ADDED : செப் 18, 2011 12:00 AM


Google News
பழநி :கொடைக்கானல் மலையடிவாரத்தில் மாந்தோப்பு ஒன்றில் இறந்து கிடந்த பெண் யானை குறித்து பழநி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழநி வரதமாநதி அணை அருகே ஆயக்குடியை சேர்ந்த நாச்சம்மாள் என்பவருக்குச் சொந்தமான, மாந்தோப்பு உள்ளது. இங்கு ஏழு வயதுள்ள பெண்யானை, மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் வேலுச்சாமி தலைமையிலான வனத்துறையினர், பரிசோதனைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். 'நான்கு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம்,' என கூறிய வனத்துறையினர், இதற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us