/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஐந்தாவது வழக்கில் தி.மு.க., மண்டலத்தலைவர் குருசாமி கைதுஐந்தாவது வழக்கில் தி.மு.க., மண்டலத்தலைவர் குருசாமி கைது
ஐந்தாவது வழக்கில் தி.மு.க., மண்டலத்தலைவர் குருசாமி கைது
ஐந்தாவது வழக்கில் தி.மு.க., மண்டலத்தலைவர் குருசாமி கைது
ஐந்தாவது வழக்கில் தி.மு.க., மண்டலத்தலைவர் குருசாமி கைது
ADDED : செப் 17, 2011 03:11 AM
மதுரை : கொலை முயற்சி,மிரட்டல், நிலஅபகரிப்பு உட்பட 4 வழக்குகளில் ஏற்கனவே கைதாகி குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் உள்ள மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் குருசாமி(தி.மு.க.,) நேற்று ஐந்தாவது வழக்கில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.மதுரையைச் சேர்ந்த நகை வியாபாரி மகேந்திரன்.
இவர் ராஜூ செட்டியார் என்பவரிடம் வாங்கிய கடன் மற்றும் வட்டி ரூ. நான்கரை லட்சம் ஆனது. அதை திருப்பித் தராததால் மகேந்திரனுக்கு சொந்தமான வீட்டை எழுதி தரும்படி ராஜூ செட்டியார் கேட்டார். மகேந்திரன் மறுக்கவே, ராஜூ செட்டியார் கிழக்கு மண்டலத்தலைவர் குருசாமியிடம் மகேந்திரன் வீட்டை தனக்கு எழுதி வாங்கித்தர உதவும்படி கோரினார். இதற்காக குருசாமியிடம் ரூ.ஒரு லட்சம் ராஜூ செட்டியார் கொடுத்தார். இதை தொடர்ந்து கிழக்கு மண்டல அலுவலகத்தில் வைத்து வீட்டை எழுதி தரும்படி மகேந்திரனை குருசாமி மிரட்டினார். கிரையப்பத்திரத்தை பதிவு செய்ய, பதிவு அலுவலகம் செல்லும் போது மகேந்திரன் மறுத்து விட்டார்.மகேந்திரன் கையெழுத்து இன்றி பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.அண்ணாமலை உதவியுடன் அவர் கிரையம் செய்ததாக பத்திரம் பதிவு செய்யப்பட்டது. மகேந்திரன் புகாரின் பேரில் நகர் குற்றப்பிரிவு போலீசார், கிழக்கு மண்டலத்தலைவர் குருசாமி மீது வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கில் குருசாமி பாளை சிறையில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டார். மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி அவரை ரிமாண்ட் செய்து உத்தரவிட்டார். குருசாமி ஐந்தாவதாக இவ்வழக்கில் கைதாகியுள்ளார்.