ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக் கோரி சாமி மனு தாக்கல்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக் கோரி சாமி மனு தாக்கல்
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக் கோரி சாமி மனு தாக்கல்
புதுடில்லி: '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு வழக்கில், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கக்கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, டில்லி சி.பி.ஐ., சிறப்புக் கோர்ட்டில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கில், சுப்ரமணியசாமி தானே வாதாடுவதற்கு அனுமதியளித்து, கோர்ட் கடந்த வாரம்உத்தரவிட்டது.இது தொடர்பாக கடந்த மாதம் 26ம் தேதிநடந்த விசாரணையின் போது, சுப்ரமணியசாமி,'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில், நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தையும், சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.இதையடுத்து, சிதம்பரத்தை இந்த வழக்கில்சேர்ப்பது குறித்து, மனு தாக்கல் செய்ய, சிறப்புக் கோர்ட் நீதிபதி சைனி, கால அவகாசம் அளித்தார்.இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை,நேற்று நடந்தது.


