Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு 7 பேர் மோதல்

பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு 7 பேர் மோதல்

பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு 7 பேர் மோதல்

பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு 7 பேர் மோதல்

ADDED : அக் 04, 2011 01:03 AM


Google News

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு ஏழு வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு 13 பேர் 17 மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அதில் பா.ம.க., வேட்பாளர் கண்ணப்பனின் பெயர் நகராட்சி வாக்காளர் பட்டியலில் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது.பா.ஜ., - கொ.மு.க.,வினரிடையே உள்ளாட்சி தேர்தல் கூட்டணி ஏற்பட்டுள்ளதால், கொ.மு.க., வேட்பாளர் சாந்தி மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் காஜாமைதீன் மனுவை வாபஸ் பெற்றார். கட்சி வேட்பாளர்கள் கூடுதலாக தாக்கல் செய்திருந்த மனுக்களையும், மாற்று வேட்பாளர்களின் மனுக்களையும் வாபஸ் பெற்றனர். தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்களில் ஒரு தள்ளுபடியும், 9 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. ஏழு வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கொடி அருமைக்கண், நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அகர வரிசைப்படுத்தி சின்னத்துடன் நேற்று வெளியிட்டார். அதன் விபரம் :கிருஷ்ணகுமார் (அ.தி.மு.க.,)- இரட்டை இலை, செந்தில்குமார் (ம.தி.மு.க.,)- பம்பரம், ஜோதிமணி (காங்.,)- கை, ஞானவடிவேல் விஜயராஜன் (பா.ஜ.,)- தாமரை, தென்றல் செல்வராஜ் (தி.மு.க.,)- உதயசூரியன், பெஞ்சமின் ஜேக்கப் (தே.மு.தி.க.,)- முரசு, மோகன்ராஜ் (இ.கம்யூ.,) - கதிர் அரிவாள்.

பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகள் தலா 9 வார்டுகள் வீதம் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மண்டலத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மனோன்மணியிடம், 66 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 8 பேர் மனுவை வாபஸ் பெற்ற நிலையில் 58 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இரண்டாவது மண்டலத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்திரராஜனிடம், 58 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், 5 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால், 53 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.மூன்றாவது மண்டலத்தில்

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலாவுதீனிடம், 63 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அதில், 6 பேர் மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில் 57 பேர் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டது.நான்காவது மண்டலத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலாஜிடம், 58 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அதில், 7 பேர் மனுக்களை வாபஸ் பெற்றதால் 51 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு, சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.நகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு 245 பேர் மனுத்தாக்கல் செய்தனர். 26 பேர் மனு வாபஸ் பெற்றதால், 219 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us