/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 முனை போட்டிஅன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 முனை போட்டி
அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 முனை போட்டி
அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 முனை போட்டி
அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 முனை போட்டி
ADDED : அக் 05, 2011 10:12 PM
அன்னூர் : அன்னூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
அன்னூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 13 ஆயிரத்து 233 வாக்காளர்கள்
உள்ளனர். 15 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கலில்
தலைவர் பதவிக்கு ஆறு பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவர் வாபஸ்
பெற்றதையடுத்து, ஐந்து பேர் களத்தில் உள்ளனர்.
ஜோதிமணி (அ.தி.மு.க.,), சத்தியபிரீதா (காங்கி.,), பத்மா (தே.மு.தி.க.,),
சுயேச்சைகளாக ராணி, எஸ்.ராணி என இருவர் ஆக, ஐந்து பேர் களத்தில் உள்ளனர்.
அ.தி.மு.க., தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தியின் மனைவி
அ.தி.மு.க., வேட்பாளராக உள்ளார். காங்., வேட்பாளர் சத்தியபிரீதா, அவிநாசி
தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். பேரூராட்சி தலைவராக இருமுறை பதவி
வகித்த சவுந்தரராஜன் மனைவி ராணி சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
15 கவுன்சிலர்கள் பதவிக்கு 85 பேர் களத்தில் உள்ளனர். இதில் 42 பேர்
அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள். 43 பேர் சுயேச்சைகள். அதிகபட்சமாக 9வது
வார்டில் 10 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக 8 மற்றும் 11வது
வார்டுகளில் தலா 3 பேர் மட்டும் போட்டியிடுகின்றனர்.


