Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பழநி- திண்டுக்கல் அகலப்பாதை தைப்பூசத்தில் துவக்கம்

பழநி- திண்டுக்கல் அகலப்பாதை தைப்பூசத்தில் துவக்கம்

பழநி- திண்டுக்கல் அகலப்பாதை தைப்பூசத்தில் துவக்கம்

பழநி- திண்டுக்கல் அகலப்பாதை தைப்பூசத்தில் துவக்கம்

ADDED : அக் 04, 2011 11:36 PM


Google News
திண்டுக்கல்:பழநி- திண்டுக்கல் ரயில் பாதை பணியை, தைப்பூச பயன்பாட்டிற்கு கொண்டு வர, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலக்காடு -ராமேஸ்வரம், கோயம்புத்தூர்- ராமேஸ்வரம் ரயில்கள், பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், மதுரை மீட்டர்கேஜ் பாதையில் இயங்கின.பின், மதுரை, திண்டுக்கல் அகலப்பாதையாக மாற்றப்பட்டன. திண்டுக்கல்- பொள்ளாச்சி, கோயம்புத்தூர் இடையே, அகலப் பாதையாக மாற்றும் பணிக்காக, 2009 மே 26 ல், ரயில்கள் நிறுத்தப்பட்டன. இப்பணிக்காக 226 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் பணிகளை முடிக்க திட்டமிட்டு, திடீரென தொய்வு ஏற்பட்டது. கான்ட்ராக்டர்களின் தாமதம் என, ஆய்வு செய்த ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் டிசம்பருக்குள் பணிகள் முடிந்துவிடும் என, தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டவாள பணி முடிந்து, பேக்கிங், சிக்னல் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இவற்றை முடித்த பின், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளிக்கவேண்டும். பழநி தைப்பூசத்திற்கு பக்தர்கள் வர ஏதுவாக ரயிலை இயக்க, முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us