பொதுப்பணித்துறையை பிரிக்க வேண்டும்
பொதுப்பணித்துறையை பிரிக்க வேண்டும்
பொதுப்பணித்துறையை பிரிக்க வேண்டும்
ADDED : செப் 25, 2011 03:30 AM
மதுரை:'பொதுப்பணித்துறை அமைச்சகத்தை இரண்டாக பிரிக்க, முதல்வர் நடவடிக்கை
எடுக்க வேண்டும்,' என, மதுரையில் நடந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள்
மற்றும் உதவிப் பொறியாளர்கள் சங்க பொதுக்குழுவில்
வலியுறுத்தப்பட்டது.இக்கூட்டத்திற்கு பொறியாளர் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை
வகித்தார்.
பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
உதவிப்பொறியாளர் சங்க தலைவர் வெங்கடாசலம், பொதுச்செயலாளர் செந்தில்குமார்,
மதுரை மாவட்ட தலைவர் அப்துல் ரஷித், செயலாளர் மூர்த்தி, ராமசந்திரன்
பேசினர். 'டாக்டர்களுக்கு வழங்கிய காலமுறை ஊதியத்தை பொறியாளர்களுக்கும்
வழங்க வேண்டும், பொதுப்பணித்துறையை இரண்டாக பிரித்தல், அனைத்து அரசு
கட்டடங்களை பொதுப்பணித்துறை மூலம் செயலாக்கம் செய்தல், ஓய்வு பெறுவோருக்கு
பணி நீட்டிப்பு அல்லது மறுபணி அமர்வு ஆணை வழங்க வேண்டாம், பிரிவு நிலையில்
பட்டப்பொறியாளர்களை மட்டும் பணி அமர்த்தி, துறைத்திட்டங்களை நவீன உத்தியில்
நிறைவேற்றுதல்,' போன்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.


