/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஷேர்-ஆட்டோ இயக்க நடவடிக்கைஅ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதிஷேர்-ஆட்டோ இயக்க நடவடிக்கைஅ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ஷேர்-ஆட்டோ இயக்க நடவடிக்கைஅ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ஷேர்-ஆட்டோ இயக்க நடவடிக்கைஅ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ஷேர்-ஆட்டோ இயக்க நடவடிக்கைஅ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி
ADDED : அக் 15, 2011 02:03 AM
சேலம்: 'சேலம், 28வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை
தவிர்க்க, ஷேர்-ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, அ.தி.மு.க.,
வேட்பாளர் மார்க்கபந்து உறுதியளித்துள்ளார்.சேலம் மாநகராட்சி, 28வது
வார்டு, அ.தி.மு.க., வேட்பாளர் மார்க்கபந்து, வார்டுக்குட்பட்ட பெரிய
எழுத்துக்கார தெரு, சின்ன எழுத்துக்கார தெரு, லாரி மார்க்கெட், அக்ரஹாரம்,
பால்மார்க்கெட் பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பகுதி
மக்களிடம் மார்க்கபந்து பேசியதாவது:இப்பகுதியில், சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பேன். பால்
மார்க்கெட் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை, தினசரி அகற்ற நடவடிக்கை
எடுத்து, சுகாதாரம் காப்பேன். இப்பகுதி மக்களின் கனவான, அரசு
மருத்துவமனையில் இருந்து பெரிய எழுத்துக்கார தெரு, சின்ன எழுத்துக்கார
தெரு, லாரி மார்க்கெட் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் செல்ல ஷேர்-ஆட்டோ இயக்க
பாடுபடுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.வார்டு செயலாளர், மகளிரணியினர், இளைஞர்,
இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


