/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஸ்பிக்நகர் லயன்ஸ் கிளப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாஸ்பிக்நகர் லயன்ஸ் கிளப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ஸ்பிக்நகர் லயன்ஸ் கிளப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ஸ்பிக்நகர் லயன்ஸ் கிளப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ஸ்பிக்நகர் லயன்ஸ் கிளப்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ADDED : அக் 09, 2011 02:29 AM
தூத்துக்குடி:காந்திஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்பிக்நகர் லயன்ஸ் கிளப்
சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.விழாவில் மாவட்ட ஆளுநர் மணி
கலந்து கொண்டார்.
பொட்டல்காடு, சவேரியார்புரம், முத்தையாபுரம், ஜே.எஸ்.நகர்
ஆகிய பகுதிகளிலுள்ள ஆரம்ப மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு சேவைதிட்ட
உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து ஸ்பிக்நகரில் நடந்த விழாவில் லயன்கிளப்
தலைவர் மணி, ஸ்பிக் நிறுவன துணைத்தலைவர் முத்துமனோகரன் உட்பட பலர் கலந்து
கொண்டனர். லயன்ஸ்கிளப் தலைவர் செந்தில்நாயகம் வரவேற்றார். பின்னர் ஏழை
மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள்,
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், தையல் மிஷின் உள்ளிட்ட
நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஸ்பிக் லயன்கிளப் துணைதலைவர் காளமேகம்
நன்றி கூறினார். ஏற்பாடுகளை லயன்ஸ்கிளப் தலைவர், செயலர் முகம்மதுசுல்தான்,
ஆரிஃப், பொருளாளர் சிவலிங்கம் மற்றும் லியோ கிளப் தலைவர்கள் இளையராஜா,
பிரதீப் மற்றும் அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.


