/உள்ளூர் செய்திகள்/சேலம்/இளைஞரான எனக்கு வாய்ப்பு தாருங்கள் காங்., மேயர் வேட்பாளர் அறிக்கைஇளைஞரான எனக்கு வாய்ப்பு தாருங்கள் காங்., மேயர் வேட்பாளர் அறிக்கை
இளைஞரான எனக்கு வாய்ப்பு தாருங்கள் காங்., மேயர் வேட்பாளர் அறிக்கை
இளைஞரான எனக்கு வாய்ப்பு தாருங்கள் காங்., மேயர் வேட்பாளர் அறிக்கை
இளைஞரான எனக்கு வாய்ப்பு தாருங்கள் காங்., மேயர் வேட்பாளர் அறிக்கை
ADDED : அக் 09, 2011 01:13 AM
சேலம்: 'இளைஞராகிய எனக்கு, சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் ஒரு முறை வாயப்பு தாருங்கள்' என, காங்., மேயர் வேட்பாளர் விஜயவர்மன் கேட்டுக் கொண்டுள்ளார்.சேலம் காங்கிரஸ் மேயர் வேட்பாளர் விஜயவர்மன் வெளியிட்ட அறிக்கை:சேலம் போன்ற மூன்றாம் நிலை மாநகராட்சியின் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் வரி சீரமைப்பு போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, வெளிநாட்டில் நான் பெற்ற கல்வியின் அனுபவத்தை கொண்டு ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்தேன்.அதை, சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக போட்டியிடுகிற நான், இந்திய தேசிய காங்., கட்சியின் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.
அதுவரை எந்தவொரு தேர்தல் அறிக்கையும் வெளியிடாத கட்சிகள், எங்களுடைய அறிக்கையை பார்த்த பின், அவசர அவசரமாக எங்கள் அறிக்கையை காப்பியடித்து, தங்களுடைய தேர்தல் அறிக்கையாக வெளியிட்டதை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.அதில் அறிக்கை வெளியிட்ட ஒரு கட்சி, கடந்தமுறை சேலம் மாநகராட்சி மட்டுமின்றி, தமிழகத்தையும் ஆட்சி செய்தது. ஆனால், பாவம் அப்போதெல்லாம் அவர்களுக்கு இந்த திட்டங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வரவில்லை. மக்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் எல்லாம் மறந்துவிட்டு, தங்கள் முன்னேற்றத்துக்காக உழைத்து விட்டார்கள்; மறந்து விட்டார்கள் போலும்.அறிக்கை வெளியிட்ட அவர்கள், இன்னும் ஒருபடி மேலேபோய், இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு, அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாததே காரணம் என்று கூறுகிறார்.ஆட்சியில் இருந்தபோதே அதிகாரிகளிடம் திட்டத்தை செயல்படுத்த முடியாதவர், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எவ்வாறு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும் என மக்கள் சிந்திக்க வேண்டுகிறேன். தனது அறிக்கையின் மூலம், அதிகாரிகளிடம் வேலை வாங்கும் திறமை இல்லை என்று அவரே ஒத்துக்கொள்கிறார். எனவே, முதியவர்களான அவர்கள் ஒதுங்கி என்னை ஆசிர்வதித்து வழிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். இளைஞராகிய எனக்கு, சேலம் மாநகராட்சி மேயர் தேர்தலில் ஒரு முறை வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


