/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைக்க வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரைஅமைதியான தேர்தலுக்கு ஒத்துழைக்க வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைக்க வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைக்க வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
அமைதியான தேர்தலுக்கு ஒத்துழைக்க வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
ADDED : அக் 04, 2011 11:06 PM
விழுப்புரம் : கோலியனூர் ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியா தலைமை தாங்கினார்.
உதவி தேர்தல் அலுவலர்கள் குருசாமி, வரதராஜபெருமாள், டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர் சுகுமார், உதவி பி.டி.ஒ., கோபாலகிருஷ்ணன், ஏகாம்பரம் முன்னிலை வகித்தனர். ஒன்றியத்தில் போட்டியிடும் தலைவர், கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.வேட்பாளர்கள் தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:கடந்த சட்டசபை தேர்தலின் போது கடைபிடித்ததைப் போல் விதிகள் பின்பற்றப்பட உள்ளது. பூத் ஏஜென்ட்டுகளை நியமிக்க விண்ணப்பிக்க வேண்டும், பூத் சிலிப் வழக்கம் போல் வழங்கப்படும். ஓட்டு சீட்டு எண்ணுவதற்கு கூடுதல் முகவர்களை நியமித்துக் கொள்ளலாம். வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களோ, பணம், உறுதிமொழிகளோ வழங்க கூடாது.பிரசாரத்திற்கும், வாகனங்களுக்கும் அனுமதி பெற வேண்டும். போட்டியாளர்களை மிரட்டுவதோ, நிர்பந்திப்பதோ கூடாது. ஒரு மாத காலத்திற்குள் செலவு கணக்கை தாக்கல் செய்திட வேண்டும். பொது சுவற்றில் விளம்பரம் செய்யக் கூடாது. ஓட்டுச் சீட்டு, ஓட்டுப் பெட்டியை சேதப்படுத்த முயற்சித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேட்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


