Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது

ADDED : அக் 03, 2011 04:07 AM


Google News

காஞ்சிபுரம் : கள்ளத்தொடர்பைக் கண்டித்த மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன், 51. இவரது மனைவி அலமேலு, 36. பார்த்திபன், வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த அலமேலு, இதுகுறித்து கணவனிடம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை அசிங்கமாக பேசி, கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அலமேலு சிவகாஞ்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us