Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ராஜா தேசிங் நினைவு நாள் செஞ்சியில் அனுசரிப்பு

ராஜா தேசிங் நினைவு நாள் செஞ்சியில் அனுசரிப்பு

ராஜா தேசிங் நினைவு நாள் செஞ்சியில் அனுசரிப்பு

ராஜா தேசிங் நினைவு நாள் செஞ்சியில் அனுசரிப்பு

ADDED : அக் 03, 2011 03:40 AM


Google News

செஞ்சி : செஞ்சியில் இன்று ராஜா தேசிங்கின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.

சுற்றுலாத்துறையும் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடக்குமா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. கடந்த 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செஞ்சி கோட்டையை ஆட்சி செய்த மன்னர்களில் நீங்காத புகழ் பெற்றவர் ராஜா தேசிங்கு. இவரின் படை தளபதியாக இருந்த மகமத்கானிடம் ராஜா தேசிங்கு கொண்டிருந்த ஆழ்ந்த நட்பும், ஆற்காட்டு நவாப்பிற்கு கப்பம் கட்ட மறுத்து, 1714 அக். 3ம் தேதி கடலி கிராமத்தில் நடந்த போரில் உயிர் நீத்த வீரமும், செஞ்சிக்கு பெருமை சேர்ப்பவையாக உள்ளன. செஞ்சிக்கோட்டையை எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்திருந்த போதும் ராஜா தேசிங்கின் கதையே நாட்டுப்புற பாடல்களாக உலா வந்தன. தமிழர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் உள்ள செஞ்சி கோட்டையில் சுற்றுலாத்துறையினர் விழா நடத்த வாய்ப்புள்ள நாளாக ராஜா தேசிங்கு நினைவு நாள் உள்ளது. இந்த விழாவை சட்டசபை தேர்தல் நெருங்கும் போது மட்டும் நடத்துகின்றனர். கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சியின் கடைசி ஆண்டில் நடந்த விழா, தி.மு.க., ஆட்சியிலும் கடைசி ஆண்டிலேயே நடந்தது.இந்த வழக்கத்தை மாற்றி ஆட்சிக்கு வரும் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே விழா நடத்த சுற்றுலாத்துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us