/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மீண்டும் நூல் விலை உயர்வு : ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலைமீண்டும் நூல் விலை உயர்வு : ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை
மீண்டும் நூல் விலை உயர்வு : ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை
மீண்டும் நூல் விலை உயர்வு : ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை
மீண்டும் நூல் விலை உயர்வு : ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை
ADDED : அக் 03, 2011 03:16 AM
ஈரோடு: கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நூல் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.
பண்டிகை நெருங்க நெருங்க விலை தொடர்ந்து அதிகரிப்பதால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நடப்பு ஆண்டு பருத்தி உற்பத்தி குறைவு காரணமாக கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தவிர, பண்டிகை காலம் நெருங்குவதல், உள்நாட்டில் பருத்தி தேவை அதிகரிப்பால் விலை மீண்டும் உயர துவங்கி உள்ளது. இதனால், ஜவுளி உற்பத்திக்கு மூலப்பொருட்களான நூல் விலையும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் வெப்ட் நூல்களான 40ம் நம்பர், 30ம் நம்பர், 34ம் நம்பர், 42ம் நம்பர், 10ம் நம்பர் ஆகியவை பின்னலாடைகள் மற்றும் ஜவுளி துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு மாதத்துக்கு முன் பருத்தி குவிண்டால் 70 ஆயிரத்தில் இருந்து 28 ஆயிரம் ரூபாயாக குறைந்தது. தற்போது, பருத்தி உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பால் பருத்தி குவிண்டால் 44 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதனால், நூல் விலையும் சூடுபிடிக்கிறது.
ஜவுளி உற்பத்தியாளர் கூறியதாவது: ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெப்ட் நூல்களான 40, 30, 34, 42, 10 நம்பர் நூல்களை ஜவுளி உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பருத்தி விளைச்சல் குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக விலையும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, இம்மாதம் துவக்கத்தில் இருந்து நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது, தீபாவளி பண்டிக்கைக்கு 20 நாட்களே உள்ள நிலையில், ஈரோடு பகுதியில் ஜவுளி உற்பத்தியில் ஜரூராக நடந்து வருகிறது.
தற்போது, நூல் விலையேற்றத்தால், ஜவுளி துணிகளும் வணிகர்கள் மறைமுகமாக விலை உயர்த்தி வருகின்றனர். மேலும் பண்டிகை நெருங்க நெருங்க நூல் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்படுவது ஜவுளி உற்பத்தியாளர்கள், வணிகர்களுடன் பொதுமக்களும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


