/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வாக்காளர் பட்டியலில் 11 ஆயிரம் பேர் சேர்ப்பு : உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட வாய்ப்புவாக்காளர் பட்டியலில் 11 ஆயிரம் பேர் சேர்ப்பு : உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட வாய்ப்பு
வாக்காளர் பட்டியலில் 11 ஆயிரம் பேர் சேர்ப்பு : உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட வாய்ப்பு
வாக்காளர் பட்டியலில் 11 ஆயிரம் பேர் சேர்ப்பு : உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட வாய்ப்பு
வாக்காளர் பட்டியலில் 11 ஆயிரம் பேர் சேர்ப்பு : உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட வாய்ப்பு
ADDED : அக் 03, 2011 03:10 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் புதிதாக, 11 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட முடியும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சட்டசபை தேர்தலின்போது இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டு, உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அதில், ஐந்து லட்சத்து 76 ஆயிரத்து 956 ஆண் வாக்காளர்கள், ஐந்து லட்சத்து 78 ஆயிரத்து 648 பெண் வாக்காளர்கள் என மொத்தம், 11 லட்சத்து 55 ஆயிரத்து 604 பேர் இடம் பெற்றிருந்தனர்.
சட்டசபை தேர்தலுக்கு பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு, வாக்காளர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்களை, வருவாய்த்துறை அலுவலர்கள், வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, தகுதியான மனுக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில், கடந்த, 19ம் தேதி வரை கொடுக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, துணை பட்டியலாக சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவ்வாறு சேர்க்கப்படும் வாக்காளர்கள், அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட 14 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து, உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறு இணைக்கப்பட்ட துணை பட்டியலில், நாமக்கல் சட்டசபை தொகுதியில், 2,130 பேர், சேந்தமங்கலம் தொகுதியில், 1,441 பேர், ராசிபுரம் தொகுதியில், 1,274 பேர், ப.வேலூர் தொகுதியில், 1,117 பேர், திருச்செங்கோடு தொகுதியில், 1,815 பேர், குமாரபாளையம் தொகுதியில், 3,318 பேர் என மொத்தம், 11 ஆயிரத்து 96 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த பட்டியலை, மாவட்ட தேர்தல் அலுவலர்கள், அந்தந்த நகராட்சி கமிஷனர், பி.டி.ஓ.,க்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே உள்ள இறுதி பட்டியலுடன், இந்த வாக்காளர்களை துணை பட்டியலாக இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 1,764 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 1,200 பேரின் பெயர்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கடந்த 19ம் தேதிக்கு பின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அவ்வாறு பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள், உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடமுடியுமா, என்பது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.


