Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சாலையை ஆக்கிரமிக்கும் கட்டுமானப் பொருட்கள்

சாலையை ஆக்கிரமிக்கும் கட்டுமானப் பொருட்கள்

சாலையை ஆக்கிரமிக்கும் கட்டுமானப் பொருட்கள்

சாலையை ஆக்கிரமிக்கும் கட்டுமானப் பொருட்கள்

ADDED : செப் 30, 2011 01:14 AM


Google News
துரைப்பாக்கம்:துரைப்பாக்கம் இரண்டாவது வார்டு பகுதியில், சாலையை ஆக்கிரமித்து கட்டுமானப் பொருட்கள் கொட்டிவைப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.துரைப்பாக்கம், இரண்டாவது வார்டு பகுதியில் விநாயகாநகர், ஆனந்தாநகர் விரிவு மற்றும் எம்.என்.சி., நகர்கள் உள்ளன. அங்கு நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.உயர்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் அப்பகுதியில் உள்ள விநாயகாநகர் பிரதான சாலை, ஆனந்தாநகர் சாலைகளில் ஏராளமான நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், பள்ளி வாகனங்களும் வந்து செல்கின்றன.

சமீபகாலமாக அப்பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சிலர் சாலையில் கட்டுமான பொருட்களான செங்கல், மணல், ஜல்லி கற்களை கொட்டி ஆக்கிரமித்து வருகின்றனர்.இதனால், சாலையின் பெரும் பகுதி அடைபட்டு போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது.மழை பெய்யும்போது, மணல் குவியல்கள் சாலையில் படர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன.இது குறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சண்டிமஹா யாகம்

சென்னை:சென்னை ஆதம்பாக்கத்தில், ஸ்ரீ சாக்த வித்யா மந்திர சஹித நட்சத்திர மண்டல, 'சண்டி மஹா யாகம்' எண் 14, இன்காம் டாக்ஸ் காலனி முதல் தெரு, டி.ஏ.பி., பள்ளி அருகில் செப்., 20 முதல் 27 நாட்களுக்கு, பிரணவானந்த அவதூத சுவாமிகளால் நடத்தப்பட்டு வருகிறது.லோக ஷேமத்தை குறிக்கோளாக கொண்டு, ஸ்ரீவித்யா மஹா சவுபாக்ய பாராம்பிக டிரஸ்ட் இந்த சண்டி மஹா யாகத்தினை நடத்தி வருகிறது.இந்த யாகத்தை பற்றிய விவரங்களை அறிய, 94432-33126 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தட்டச்சு தேர்வுக்கு'மவுசு' குறையலை

சென்னை:''கணினிக்கு ஏற்ப தட்டச்சு தேர்வில் மாற்றம் கொண்டு வந்ததால், தட்டச்சு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'' என, சென்னை மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் அமைப்பாளர் சந்தான கிருஷ்ணன் கூறினார்.சென்னை மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் 43வது ஆண்டு விழா மயிலாப்பூரில் நடந்தது. இதில், சென்னையிலுள்ள தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையத்தின் நிறுவனர்கள் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக தட்டச்சு பள்ளியை நடத்தி வருபவர்களுக்கும், குறுகிய கால பயிற்சியை முடித்தவர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டனர்.தற்போதைய தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி குறித்து, மக்களிடம் உள்ள விழிப்புணர்வு மற்றும் கணினிக்கும், தட்டச்சுக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கிப் பேசிய சங்க அமைப்பாளர் சந்தான கிருஷ்ணன், 'தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர் என்றால், மற்ற மாநிலங்களில் 10 முதல் 15 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இதற்கு கணினிக்கு ஏற்ப தட்டச்சு பாடத்திட்டத்தை மாற்றியதே காரணம். இதன்மூலம், 1998ல் தட்டச்சு பயின்றவர்களின் எண்ணிக்கை அளவிற்கே, இப்போதும் பயிலுகின்றனர்.

கணினியை வேகமாகவும், திறமையாகவும் இயக்க, தட்டச்சு பயிற்சி உதவுகிறது. தட்டச்சு தெரிந்தவர்கள் மட்டும் தான் சிறந்த கணினி பயிற்சியாளராக வர முடியும்' என்றார்.

மனைவிக்கு கத்திக்குத்துகணவன் கைது

துரைப்பாக்கம்:கள்ளக்காதலனுடன், உல்லாசமாக இருந்த மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.துரைப்பாக்கம், சுப்பிராயன் நகரைச் சேர்ந்தவர் ரஜினி, 34. லாரி டிரைவர். இவரது மனைவி மோகன சுந்தரி, 28. ரஜினி நேற்று முன்தினம் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது, தனது மனைவி மோகன சுந்தரி வீட்டில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்டார்.விசாரித்தபோது, அந்த நபர் மனைவியின் கள்ளக்காதலன் என்பது தெரியவந்தது. ஆத்திரமடைந்த ரஜினி கள்ளக்காதலனிடம் தகராறில் ஈடுபட்டதையடுத்து, அவர் தப்பியோடினார். பின்னர், ரஜினி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், தனது கையில் இருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக உடல் முழுவதும் தாக்கினார்.இதில், பலத்த காயமடைந்த மோகன சுந்தரியை அருகில் இருந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். துரைப்பாக்கம் போலீசார் ரஜினியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நிதி நிறுவனத்தில்பணம் கையாடல்

சென்னை:தனியார் நிதி நிறுவனத்தில், ஐந்தரை லட்ச ரூபாயை கையாடல் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.எழும்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், விருகம்பாக்கம் பகுதி ஏஜன்டாக பணியாற்றியவர் பிரபாகரன், 27. இவரது சொந்த ஊர், திண்டுக்கல். கடந்த, 28ம் தேதி, விருகம்பாக்கம் பகுதியில் வசூல் செய்த, 5 லட்சத்து, 64 ஆயிரத்து, 298 ரூபாயுடன், பிரபாகரன் தலைமறைவாகி விட்டார்.விருகம்பாக்கம் போலீசில், நிதி நிறுவன உரிமையாளர் ரமேஷ் கண்ணன் புகார் அளித்தார். போலீசார், தலைமறைவாக இருந்த பிரபாகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தட்டச்சு தேர்வுக்கு 'மவுசு' குறையலை

சென்னை:''கணினிக்கு ஏற்பதட்டச்சு தேர்வில் மாற்றம் கொண்டு வந்ததால்,தட்டச்சு தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது'' என, சென்னை மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் அமைப்பாளர் சந்தான கிருஷ்ணன் கூறினார்.சென்னை மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின், 43வது ஆண்டு விழா மயிலாப்பூரில் நடந் தது.இதில், சென்னையிலுள்ள தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி மையத்தின் நிறுவனர்கள் கலந்து கொண்டனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக தட்டச்சு பள்ளியை நடத்தி வருபவர்களுக்கும், குறுகிய கால பயிற்சியை முடித்தவர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டனர்.தற்போதைய தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி குறித்து, மக்களிடம் உள்ள விழிப்புணர்வு மற்றும் கணினிக்கும், தட்டச்சுக்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்கிப் பேசிய சங்க அமைப்பாளர் சந்தான கிருஷ்ணன், 'தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர் என்றால், மற்ற மாநிலங்களில் 10 முதல் 15 ஆயிரம் பேரே எழுதுகின்றனர்.

இதற்கு கணினிக்கு ஏற்ப தட்டச்சு பாடத்திட்டத்தை மாற்றியதே காரணம். இதன்மூலம், 1998ல் தட்டச்சு பயின்றவர்களின் எண்ணிக்கை அளவிற்கே, இப்போதும் பயிலுகின்றனர். கணினியை வேகமாகவும், திறமையாகவும் இயக்க தட்டச்சு பயிற்சி உதவுகிறது. தட்டச்சு தெரிந்தவர்கள் மட்டும் தான் சிறந்த கணினி பயிற்சியாளராக வர முடியும்' என்றார்.

மனைவிக்கு கத்திக்குத்துகணவன் கைது

துரைப்பாக்கம்:கள்ளக்காதலனுடன், உல்லாசமாக இருந்த மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.துரைப்பாக்கம், சுப்பிராயன் நகரைச் சேர்ந்தவர் ரஜினி, 34. லாரி டிரைவர். இவரது மனைவி மோகன சுந்தரி, 28. இவர்களுக்கு, கபிலன், 9. என்ற மகனும், கமலி, 4. என்ற மகளும் உள்ள னர்.

ரஜினி நேற்று வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பினார். அப்போது, தனது மனைவி மோகன சுந்தரி வீட்டில் வேறொரு ஆணுடன் உல்லாசமாக இருப்பதைக் கண்டார்.விசாரித்தபோது, அந்த நபர் மனைவியின் கள்ளக்காதலன் என்பது தெரியவந்தது. ஆத்திரமடைந்த ரஜினி கள்ளக்காதலனிடம் தகராறில் ஈடுபட்டதையடுத்து, அவர் தப்பியோடினார். பின்னர், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், தனது கையில் இருந்த கத்தியால் மனைவியை சரமாரியாக உடல் முழுவதும் தாக்கினார்.இதில், பலத்த காயமடைந்த மோகன சுந்தரியை அருகில் இருந்தவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். துரைப்பாக்கம் போலீசார் ரஜினியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நிதி நிறுவனத்தில்பணம் கையாடல்

சென்னை:தனியார் நிதி நிறுவனத்தில், ஐந்தரை லட்ச ரூபாயை கையாடல் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.எழும்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், விருகம்பாக்கம் பகுதி ஏஜன்டாக பணியாற்றியவர் பிரபாகரன், 27. இவரது சொந்த ஊர், திண்டுக்கல். கடந்த, 28ம் தேதி, விருகம்பாக்கம் பகுதியில் வசூல் செய்த, 5 லட்சத்து, 64 ஆயிரத்து, 298 ரூபாயுடன், பிரபாகரன் தலைமறைவாகி விட்டார்.விருகம்பாக்கம் போலீசில், நிதி நிறுவன உரிமையாளர் ரமேஷ் கண்ணன் புகார் கூறினார். போலீசார், தலைமறைவாக இருந்த பிரபாகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us