Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மேயர் சீட்டை ஆள் கிடைக்காமல் கோட்டை விட்ட இந்திய கம்யூ.,

மேயர் சீட்டை ஆள் கிடைக்காமல் கோட்டை விட்ட இந்திய கம்யூ.,

மேயர் சீட்டை ஆள் கிடைக்காமல் கோட்டை விட்ட இந்திய கம்யூ.,

மேயர் சீட்டை ஆள் கிடைக்காமல் கோட்டை விட்ட இந்திய கம்யூ.,

ADDED : செப் 29, 2011 09:35 PM


Google News
Latest Tamil News

திருநெல்வேலி : இந்திய கம்யூ.,கேட்ட நெல்லை மேயர் சீட் வழங்கப்பட்டும் வேட்பாளருக்கு ஆள் கிடைக்காததால், கடைசிநேர குழப்பம் ஏற்பட்டது.

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து கழற்றி விடப்பட்ட கம்யூ., கட்சிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின. தனித்துவிடப்பட்ட தே.மு.தி.க., ஆரம்பத்திலேயே பலமேயர் சீட்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. நெல்லை மேயர் வேட்பாளராக சீதாலட்சுமி அறிவிக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கட்சி தே.மு.தி.க., உடன் ஒட்டிக்கொண்டு இரண்டு மேயர் இடங்களை பெற்றது.



இந்திய கம்யூ.,கட்சியோ தே.மு.தி.க., கூட்டணியில் இணையும் முன்பே, திருப்பூர், திருநெல்வேலி ஆகிய மேயர் சீட்களை கேட்டு பெற்றது. இதனால், தே.மு.தி.க.,வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யாமல் காக்க வைக்கப்பட்டார். ஆனால், இந்திய கம்யூ., கட்சி மாவட்டக்குழுவினர் ஆய்வு செய்ததில், தங்கள் கட்சிக்கு நெல்லை மாநகராட்சியில் அத்தனை பலம் இல்லை என்பதை புரிந்துகொண்டு, 'எங்களுக்கு சீட் வேண்டாம்', என தெரிவித்தனர்.

ஆனால் சீதாலட்சுமி தரப்பினரோ, தங்கள் கட்சி தலைவர் கேப்டன், இந்திய கம்யூ.,க்கு 'சீட்' என அறிவித்த பிறகு, நாங்கள் போட்டியிடுவது நன்றாக இருக்காது, என பின்வாங்கினார். இதனால் யார் வேட்பாளர் என்ற குழப்பம் நீடித்தது. நேற்று மதியம் ஒரு மணி வரை குழப்பம் நீடித்தது.

வேறு வழியில்லாமல் தே.மு.தி.க.,மகளிர் அணி செயலாளர் 'அமுதா'வை மனுவை தாக்கல் செய்ய அழைத்து வந்தனர். அவர் தமது தோழியர்கள் சிலருடன் உள்ளே வந்தார். ஆனால், கட்சி நிர்வாகிகள் என்ன நினைத்தார்களோ திடீரென 'அமுதா வேண்டாம்' என கூறி உடையார்பட்டியை சேர்ந்த 'கண்ணம்மாள்' என்பவரை களத்தில் நிறுத்தி, அவருக்காக வேட்புமனுசெய்தனர்.

இதனால் வெகுண்டெழுந்த அமுதா,''என்னை அழைத்து வந்து அசிங்கப்படுத்திவிட்டீர்களே,'' என நெல்லை மாநகராட்சி வளாகத்தில் கூச்சலில் ஈடுபட்டார். மாவட்ட செயலர் கணேஷ்குமார் ஆதித்தன், முகம்மதுஅலி உள்ளிட்டோர் அவரை சமாதானப்படுத்தி கண்ணம்மாளை வேட்புமனு தாக்கல் செய்த வைத்தனர்.

சீட் வேண்டும் என கேட்ட இந்திய கம்யூ.,கட்சியினரோ, கடைசி வரை மாநகராட்சி பக்கமே எட்டிப்பார்க்கவில்லை.

27வது வார்டு உள்ளிட்ட சில வார்டுகளிலும் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ., உள்ளிட்ட கட்சிகளில் யாருக்கு சீட் என்பதில் குழப்பம் நிலவியது. கடைசி நேர மனுதாக்கலால் எத்தனை பேரின் மனுக்கள் தள்ளுபடியாகப்போகிறதோ என்ற கவலை வேறு கட்சியினரை தொற்றிக்கொண்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us