ADDED : செப் 26, 2011 10:57 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே நில அபகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க., கிளை செயலாளர் கைது செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை சி.கூத்தாம்பட்டியை சேர்ந்தவர் செல்வி, 30. இவர், திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரனிடம் அளித்துள்ள புகார்:ஆத்தூர் சேடபட்டி தி. மு.க., கிளை செயலாளர் பாலு. இவர் 2002 ல், மகள் நாகராணி பெயரில், 2 ஏக்கர் 47 சென்ட் இடத்தை, எனக்கு விற்றார். இதே இடத்திற்கு போலி ஆவணம் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து, வேறு ஒருவருக்கு விற்றார் என, கூறியிருந்தார்.பாலுவை, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் கைது செய்தார்.