/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் புத்தகம் இல்லை; தேர்வு மட்டும் உண்டுதனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் புத்தகம் இல்லை; தேர்வு மட்டும் உண்டு
தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் புத்தகம் இல்லை; தேர்வு மட்டும் உண்டு
தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் புத்தகம் இல்லை; தேர்வு மட்டும் உண்டு
தனியார் பள்ளி மாணவர்களுக்கு சிக்கல் புத்தகம் இல்லை; தேர்வு மட்டும் உண்டு
ADDED : செப் 23, 2011 10:50 PM
பழநி : சில தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள்
வழங்கப்படாத சூழலில், காலாண்டுத் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய
நெருக்கடி உருவாகியுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின், அனைத்து
பள்ளிகளிலும், ஆக., 15 க்குள் சமச்சீர் புத்தகங்களை வழங்க, அரசு
உத்தரவிட்டிருந்தது. புத்தக வினியோகத்தில், சில தனியார் பள்ளிகள் அலட்சியம்
காட்டின. இந்நிலையில் கடந்த 22 ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வுகள்
துவங்கியுள்ளன. பழநியில் சில பள்ளிகளில் தமிழ், கணித பாடப் புத்தகங்கள்
இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் மாணவர்கள், காலாண்டுத் தேர்வை எழுதத்
துவங்கியுள்ளனர். மாணவர்கள் கூறியது: புத்தகங்கள் இல்லாததால், தேர்வுக்கு
தயாராவதில் சிரமம் உள்ளது. குறிப்புகளை மட்டும் வைத்துப் பயனில்லை.
இவற்றிற்கான தனியார் உரைநூல்கள், கூடுதல் விலைக்கு வாங்க முயன்றும்
கிடைக்கவில்லை, என்றனர். மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலக அதிகாரி ஒருவர்
கூறியது: குறுகிய காலத்தில் புத்தக வினியோகம் நடக்கிறது. சில பள்ளிகளில்,
புத்தக தொகைக்கான டி.டி., கொடுப்பதில் தாமதப்படுத்தினர். தேவையான
புத்தகங்கள் கிடைக்காமல், வேலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில்
வாங்கி வந்து வினியோகித்தோம். திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் 90 சதவீதம்
முடிந்துள்ளது. தேனியில் மட்டுமே, அதிக பள்ளிகளில் இப்பிரச்னை உள்ளது.
உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி, தேர்வு குறித்த பிரச்னையில் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும், என்றார்.


