/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொதுஇடத்தில் புகைபிடித்த12 பேருக்கு அபராதம்பொதுஇடத்தில் புகைபிடித்த12 பேருக்கு அபராதம்
பொதுஇடத்தில் புகைபிடித்த12 பேருக்கு அபராதம்
பொதுஇடத்தில் புகைபிடித்த12 பேருக்கு அபராதம்
பொதுஇடத்தில் புகைபிடித்த12 பேருக்கு அபராதம்
ADDED : செப் 23, 2011 04:29 AM
மடத்துக்குளம்:மடத்துக்குளம் பகுதியில் பொது இடத்தில் சட்டவிரோதமாக
புகைபிடித்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம் பொது
சுகாதாரம் மற்றும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுகுமார் உத்தரவின்
பேரில் மடத்துக்குளம் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர்கள் சதாசிவம்,
சந்திரசேகர், தாமரைக்கண்ணன், சூரியகலாநிதி, யோகானந்தம் ஆய்வு மேற்கொண்டனர்.
மடத்துக்குளம், கணியூர்,சோழமாதேவி பகுதியில் பஸ் ஸ்டேண்ட்,
டீக்கடை,பேக்கரி உள்ளிட்ட பொது இடங்களில் சட்டவிரோதமாக புகை பிடித்த 12
நபர்களுக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இத்துடன்
புகையிலையினால் ஏற்படும்நோய்கள், பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களிடம்
விளக்கப்பட்டது. புகைபிடிக்க தடை என்ற நோட்டீஸ் மற்றும் சுவரொட்டிகள்
அனைத்து கடைகளில் ஒட்டப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.