Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நகராட்சி தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர்கள்

நகராட்சி தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர்கள்

நகராட்சி தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர்கள்

நகராட்சி தலைவர் பதவி தி.மு.க., வேட்பாளர்கள்

ADDED : செப் 23, 2011 12:54 AM


Google News
கோபிசெட்டிபாளையம்: நகராட்சி தலைவர் பதவிக்கான தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயோடேட்டா: * கோபி நகராட்சி பெயர்: சத்யா (31) ஜாதி: முதலியார். கல்வி தகுதி: எம்.எஸ்.எஸி., ஊர்: மொடச்சூர் திரு.வி.க. வீதி. குடும்பம்: கணவர் பாலமுருகன், மின்வாரிய தொழிற்சங்க திட்டக்குழு தலைவர்.

அரசியல் அனுபவம்: 2001 முதல் தி.மு.க., உறுப்பினர். * சத்தியமங்கலம் பெயர்: வெங்கிடுசாமி (52) ஜாதி: கொங்கு வேளாள கவுண்டர் அரசியல் அனுபவம்: 1996 மற்றும் 2001 உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., சார்பாக சத்தி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது மூன்றாவது வார்டு கவுன்சிலர். சத்தி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவராகவும், நகர வங்கி இயக்குனராகவும் இருந்தவர். பிற பதவி: சத்தியமங்கலம் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர், சத்தி 'கேபிள் டிவி' அசோசியேஷன் கவுரவத் தலைவர். * புன்செய்புளியம்பட்டி பெயர்: அன்பு (43) கல்வி: எம்.பி.ஏ., மனைவி: ராணி; அம்மா மெட்ரிக் பள்ளி பள்ளி செயலாளர். அரசியல் அனுபவம்: 2001-2006ல் புன்செய்புளியம்பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர். தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக மேலாண்மை உறுப்பினராக பதவி வகித்தார். தந்தை சாமிநாதன், தாயார் சம்பூரணம் சாமிநாதன் ஆகிய இருவரும் எம்.பி.,யாக இருந்தவர்கள். * பவானிபெயர்: நாகராஜன் (53) ஜாதி: வன்னியர். தந்தை: சீரங்கன் தி.மு.க., உறுப்பினர். மனைவி: சந்திரா. அரசியல் அனுபவம்: தி.மு.க., நகர செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தமிழக கைத்தறி வாரியக்குழு முன்னாள் உறுப்பினர்.

* வெள்ளகோவில் பெயர்: கனகசபாபதி (55), ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டர். தொழில்: முழு நேர அரசியல். அரசியல் அனுபவம்: 1997-2000 கூட்டுறவு கட்டிட சங்க தலைவர், 2001-06 வெள்ளகோவில் நகராட்சி தலைவர், 2007-11 மாவட்ட வேளாண் விற்பனைக் குழு உறுப்பினர். * தாராபுரம் பெயர்: சுமதி (40) கணவர்: தனசேகர், தாராபுரம் தி.முக. நகர செயலாளர். தாராபுரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர், தற்போது, ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனக் கூட தலைவர். ஜாதி: கொங்கு வேளாள கவுண்டர். அரசியல் அனுபவம்: கட்சி உறுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us