/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிளஸ் 2 தனித்தேர்வு இன்று துவக்கம்பிளஸ் 2 தனித்தேர்வு இன்று துவக்கம்
பிளஸ் 2 தனித்தேர்வு இன்று துவக்கம்
பிளஸ் 2 தனித்தேர்வு இன்று துவக்கம்
பிளஸ் 2 தனித்தேர்வு இன்று துவக்கம்
ADDED : செப் 20, 2011 11:38 PM
பொள்ளாச்சி : பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மெட்ரிக் தனித்தேர்வுகள் இன்று (21ம் தேதி) துவங்குகிறது.
பொள் ளாச்சி கல்வி மாவட்டத்தில், 303 பேர் பிளஸ் 2 தேர்வும், எட்டு பேர் மெட்ரிக் தேர்வும் எழுதுகின்றனர். பிளஸ் 2 தனியாக எழுத விரும்பும் தனித்தேர்வாளர்களுக்கு இன்று (21ம் தேதி) முதல் தனித்தேர்வு நடக்கிறது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 தனித்தேர்வுக்கு பொள்ளாச்சி சமத்தூர் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 176 பேரும், வால்பாறை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் 127 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 303 பேர் தேர்வு எழுதவுள்ளனர். பத்தாம் வகுப்பு மெட்ரிக் தனித்தேர்வும் இன்று துவங்குகிறது. இத்தேர்வுக்காக, கல்வி மாவட்டத்தில் ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட மையத்தில் எட்டு பேர் தேர்வு எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு அரசு பாடத்திட்ட தனித்தேர்வுகள் நாளை மறுதினம் (23ம் தேதி) முதல் துவங்குகிறது.இன்று துவங்கும் தேர்வுகள் வரும் அக்., முதல் தேதி வரையும், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு வரும் செப்., 30ம் தேதி வரையும் நடக்கும். இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.